சினிமா என்பது இந்தியர்களில் மிகப்பெரிய பொழுதுபோக்கு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு. ஆனால் வருடத்திற்கு வருடம் தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் குறைந்து கொண்டே வருவது அனைவருக்கும் வருத்தம் தான்.

அந்த வகையில் இந்த வருடம் தொடக்கமே பேட்டை, விசுவாசம் என இரண்டு மெகா ஹிட் படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்கள் மட்டுமே தமிழகத்தில் ரூபாய் 250 கோடி வரை வசூல் செய்தது.

இதனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கொண்டாட்டம் என்று பார்த்தால் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இந்த வருடத்தில் இதுவரை பேட்டை, விசுவாசம், தடம் காஞ்சனா 3 ஆகிய நான்கு படங்கள் மட்டுமே அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்தது என்று மேலும் 90 சதவீத படங்கள் தோல்வி தான் என்று கூறியுள்ளார். இந்த நான்கு படங்களைத் தவிர மீதி படங்கள் எதுவும் பெரிதாக தியேட்டர் ஓனர்களுக்கு லாபத்தை ஈட்ட வில்லை என்று கூறியுள்ளார்.