உலகளிலேயே அதிகம் சம்பாரிக்கும் கோடீஸ்வரிகளின் பட்டியில் :முதல் மூன்று இடத்தை கைப்பற்றிய இந்திய பெண்கள் அமெரிக்காவில் சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரியான பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள பிரபல வணிக பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதில் 21 வயது முதல் 92 வயது வரை உள்ள 80 பேர் கொண்ட இந்த பட்டியலில் இந்திய வம்சாவழியை சேர்ந்த 3 பெண்கள் இடம் பெற்றதாக தெரிவித்தது.

அரிஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெய்ஸ்ரீ உல்லால் தனது 58-வது வயதில் 140 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 18-வது இடம் பிடித்துள்ளார்.இவர் லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவராவர்.

இதே போல் வெறும் 2000 டாலர் முதலீட்டுடன் வீட்டிலேயே நிறுவனம் தொடங்கிய சின்டல் நிறுவனத்தின் துணை நிறுவனர் நீர்ஜா சேதி (64), 100 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 23-வது இடம் பிடித்துள்ளார்.

34 வயதான நேஹா நர்கெடே, 36 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளார்.இவர் ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர்.