உங்கள பாத்தா ரொம்ப திட்ட தோணுது புகை படத்தால் காண்டன சீனியர் நடிகர் நடிகரும், இயக்குனரமான சேரனுடன் பெண் அரசியல்வாதி தமிழச்சி தங்கபாண்டியன் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டவர்களுக்கு தனது கண்டனத்தை சேரன் தெரிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தான் மஞ்சள் நிற புடவை அணிந்து நின்று கொண்டிருந்த புகைப்படத்தை தமிழச்சி வெளியிட்டார்.

இந்நிலையில் அவருடன் சேர்ந்து அருகில் நடிகரும், இயக்குமருமான சேரன் மஞ்சள் நிற ஆடையுடன் நிற்பது போல விஷமிகள் யாரோ போட்டோ ஷாப் செய்து புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டனர்.

இதை பார்த்து கோபமடைந்த சேரன், மீம்ஸ் கிரியேட்டர்ஸ், எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு.

அவங்க ஒரு பேராசிரியை, ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தனிப்பட்ட முறையில் மீம்ஸ் பன்றதே சம்பந்தப்பட்டவங்கள காயப்படுத்தும்.. இதுபோல மீம்ஸ் எல்லாம் கிரியேட் பண்ணவனை பாத்தா கேவலமா திட்ட தோணும். நீங்களே உங்கள மட்டமாக்கிக்காதீங்க என பதிவிட்டுள்ளார்.