சென்னை: விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க, பிரபல இயக்குநர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக சிவகார்த்திக்கேயன் படத்தில் நடித்த நடிகை ஷாலு புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திக்கேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகி திவ்யாவிற்கு தோழியாக நடித்தவர் ஷாலு சம்மு. சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மீ டூ:
மீ டூ அனுபவம்:
அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள் மீ டூவால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஷாலு, ‘ஆம். ஒரு நடிகையாக எனக்கும் அந்த அனுபவங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் அந்த சூழ்நிலைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என அறிந்து, அதனை தாண்டி வந்திருக்கிறேன்.

என்ன பயன்?
வேடிக்கை உலகம்:

ஒருவேளை சம்பந்தப்பட்டவர்கள் பற்றி நான் புகார் கூறினால் மட்டும் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது. அவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ளப் போகிறார்களா என்ன? வேடிக்கையான உலகம்’ என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் படம்:
விஜய் தேவரகொண்டா படம்:

கூடவே, ‘சமீபத்தில் கூட எனக்கு அதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரபல இயக்குநர் ஒருவர் நிபந்தனை விதித்தார்’ என ஷாலு தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி:
மக்கள் அதிர்ச்சி:

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரது படங்களில் வாய்ப்பு தர நடிகைகளிடம் இப்படி மற்றவர்கள் பாலியல் ரீதியாக நிபந்தனை விதிப்பதாக வெளியான இத்தகவலால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.