சினிமாவில் பல ஆண்டுகளாக கலக்கி வந்த நடிகை தான் சினேகா. கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கைவிடவில்லை. சின்னத்திரையிழும் தோன்றி வந்தார் சினேகா. ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகா பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஸ்னேஹாவுக்கு ஒரு அழகான அக்காவும் உள்ளார். சினேகா அக்காவின் பெயர் சங்கீதா என்பதாகும். சினேகா மற்றும் அவருடைய அக்கா சங்கீதா இருவரும் நல்ல நண்பர்கள் ஆவர். ஸ்னேஹாவுக்கு ஒரு அண்ணனும் உள்ளார்.


சினேகா மும்பையில் பிறந்தவர் பிறகு தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர் இவருடைய குடும்பம். ஸ்னேஹாவின் சினிமா பயணம் நீண்ட நெடியது. 2000ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் சினேகா. கடந்த ஆண்டு எந்த ஒரு படத்திலும் சினேகா தோன்றவில்லை ஆனால் இந்த ஆண்டு சில படங்களில் நடித்து வருகிறார்.