சசிகலா பேச்சை துளியளவு கூட கேட்காமல் தினகரன் செய்த மிகப்பெரிய தப்பே இது தான் சசிகலா பேச்சை டிடிவி தினகரன் கேட்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது
சென்னை: அப்பவே சசிகலா சொன்னாராம்.. ஆனால் அவர் சொன்னதை எதுவுமே டிடிவி தினகரன்தான் கேட்கவில்லை போல தெரிகிறது. அதனால்தான் இப்போது அமமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள், பஞ்சாயத்துகள் நடந்து வருகின்றன!

கூட்டணி விவகாரம் தமிழக அரசியல் கட்சிகளிடையே தலைதூக்கி இருந்த சமயம். அப்போது, அமமுக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது.

திமுக, அதிமுக இதில் யார்கூட சேர போகிறது என்ற ஆர்வம் அதிகரித்தபடியே இருந்தது. அந்த சமயத்தில்தான், வழக்கம்போல் ஆலோசனை செய்ய பெங்களூர் சென்று வந்தார். வந்ததும் எம்பி தேர்தல் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்தார்.

வெறும் இடைத்தேர்தல்
ஆனால் இப்போதுதான் ஒரு விஷயம் கசிந்துள்ளது. எம்பி தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்று சசிகலா சொன்னாராம். சூழல் சரியில்லாததால், 40 தொகுதி என்பதை விட்டுவிட்டு, வெறும், 22 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், ஏனென்றால், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றால் அது திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் தினகரன்தான் சசிகலா சொன்னதை கேட்ட்கவே இல்லையாம்.

கோபம்
தன்னையும் தன் கட்சியையும் அளவுக்கு அதிகமாக தினகரன் நம்பியதுதான் இவ்வளவு தோத்து போனதற்கு காரணமே! எவ்வளவுதான் ஓட்டு மெஷின் மீது தினகரன் காரணம் சொன்னாலும் சசிகலாவுக்கு இன்னும் கோபமே போகலையாம்.

சந்தேகங்கள்
கட்சியை விட்டு யாரும் போகாமல் பார்த்து கொள்ளும்படி மட்டும் சொல்லி இருக்கிறார். ஆனால் அதுவும் நடக்காது போல இருக்கு. குறிப்பாக தங்க தமிழ்செல்வன் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவருடைய அமைதி பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

முயற்சி
அந்த யூகங்களுக்கும் தெளிவான பதில்லை அவர் இதுவரை சொல்லவே இல்லை. ரிசல்ட்டுக்கு பிறகு தேனி உள்ளிட்ட பிற பகுதியில் அமமுகவில் சிலர் கட்சி தாவலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோக, அதிருப்தி அமமுகவினரை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் அதிமுக, திமுக போட்டி போட்டு இறங்கி உள்ளது.

பொறுப்பாளர்கள்
இரண்டு நாளைக்கு முன்னாடி நடந்த அமமுக ஆலோசனை கூட்டத்தில், “இனிமே கூட்டணி வைத்து போட்டியிடலாம், தனியா போட்டியிட வேண்டாம்” என்று நிர்வாகிகள், வேட்பாளர்கள், பொறுப்பாளர்கள் சொன்னார்கள். இந்த பேச்சை தினகரன் எந்த அளவுக்கு கவனத்தில் கொள்வார் என தெரியவில்லை. அன்று சசிகலா பேச்சை கேட்காமல் போனது எவ்வளவு பெரிய தப்பு என்பதை தினகரன் நன்றாகவே உணர்ந்திருப்பார்!