தமிழர்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருகிறது. அதில் பெரும்பாலான நம்பிக்கைகளுக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.

அந்த வகையில் மக்களிடையே நிலவும் ஒரு நம்பிக்கை விரல் நகங்களை ஒன்றோடொன்று தேய்ப்பது அடர்த்தியான, நீளமான மற்றும் உறுதியான முடியை வழங்கும்.

இதற்கு பின்னால் உண்மை இருக்கிறதா என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

விரல்களை ஒன்றோடொன்று தேய்ப்பது உங்கள் பல நல்ல பலன்களை வழங்குவதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது.

இது பல நூற்றாண்டுகளாக மக்களிடையே நிலவி வரும் ஒரு பழக்கமாகும். இவ்வாறு செய்வது வழுக்கை விழுந்த இடங்களில் கூட முடி வளர்வதாக கூறப்படுகிறது.
குழந்தையாக இருக்கும்போது மழை வரும்போது நாம் நகங்களை தேய்ப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். இவ்வாறு நகங்களை தேய்ப்பது முழுக்க முழுக்க ஒரு உடற்பயிற்சி ஆகும், அதேசமயம் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

முடி வளருமா?
விரல் நகங்களை ஒன்றோடொன்று தினமும் சில நிமிடங்கள் தேய்ப்பது அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது முடியின் நிறத்தை தக்க வைப்பதுடன் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

எப்படி வேலை செய்கிறது?
யோகா நிபுணர்களின் கருத்துப்படி விரல்களை ஒன்றோடொன்று தேய்க்கும்போது அதனால் உருவாகும் ஆற்றல் நமது உடலின் சக்கரங்களை சரி செய்கிறது. உடலில் ஏற்படும் ஆற்றல் சமநிலையின்மையை இது சரி செய்கிறது. இதனை பிரதிபலிக்கும் ஆற்றல் முறை என்றும் கூறுவார்கள்.

அறிவியல் காரணம்
சரியான பிரதிபலிக்கும் புள்ளியை தூண்டும்போது தீர்க்கரேகை ஆற்றலானது உடலின் பாதைகள் மூலமாக உடலின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும். இதன் மூலம் அந்த இடங்களில் ஆற்றல் அதிகரிக்கும். விரல்களை உண்ரடொன்று தேய்ப்பது உச்சந்தலையில் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.