இதனால் தான் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து ரட்சிதா கணவர் வெளியேறினாரா வெளிவரும் அதிர்ச்சி தகவல் ரசிகர்கள் ஷாக் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பூவே பூச்சூடவா சீரியலும் ஒன்று, இந்த சீரியலின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதாவின் கணவர் தினேஷ் நடித்து வந்தார்.

அவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து தினேஷ் விலகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இனி அவருக்கு பதிலாக சன் டிவி சீரியலில் நடித்து வந்த கார்த்திக் வாசு நடிக்கவுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் அடுத்த புராஜக்ட் பற்றி உங்கள் அனைவருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி. என்னிடம் பலர் அடுத்து என்ன பிளான் என நிறைய கேள்விகளைக் கேட்டீர்கள். இதோ உங்களுக்கான பதில். பூவே பூச்சூடவா சீரியலில் லீட் ரோலில் நடிக்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட பூவே பூச்சுடுவா சிரியல் ரசிகர்கள் சிலர் இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, எப்போதுமே எங்க சிவா பாஸ் ரோலுக்கு தினேஷ் தான் பொருத்தமானவர். ரேஷ்மா-தினேஷ் தான் செம ஜோடி. தினேஷ் மட்டுமே அந்த ரோலுக்கு பொருத்தமானவர். எங்கள் மனதில் பதிந்த அவரை மாற்றிவிடாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படி நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து தினேஷ் விலகியதற்கு முக்கிய காரணம், அவருக்கு இன்னொரு சீரியலில் இதைவிட நல்ல லீட் ரோல் கிடைத்துள்ளதாம், அதன் காரணமாகவே அவர் இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.