TRP வெறியால் விஜய் தொலைகாட்சி செய்யும் வேலை என்ன தெரியுமா பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது, நிகழ்ச்சி புரொமோக்கள் எல்லாம் வெளியாகி வருகிறது.

ஆனால் பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிவதில் தான் பெரிய குழப்பமே ரசிகர்களிடம் உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ஜாங்கிரி மதுமிதா கலந்துகொள்கிறார் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது.‘

நிகழ்ச்சி குறித்து வந்த அடுத்த அப்டேட் என்னவென்றால் தமிழ்-தெலுங்கு சினிமா பிரபலங்களை தெரிக்கவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி பிக்பாஸிற்கு வருகிறார் என்கிறார்கள். இவர் நிகழ்ச்சிக்கு வந்தால் TRP பற்றி நீங்களே யோசனை செய்யுங்கள். சென்னை:பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆலியா மானசா, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா விளையாடாத நாள் அன்று துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா, பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன அச்சுமா, பிக் பாஸ் வீட்டிற்கு போகிறீர்களாமே என்று ரசிகர்கள் அர்ச்சனாவிடம் ட்விட்டரில் கேட்டார்கள். அதற்கு அவரோ, நான் எங்கும் போகவில்லை என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு இது போன்று சிலரின் பெயர்கள் அடிபடுவது வழக்கமாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயர் அடிபடும். ஆனால் நிகழ்ச்சியில் அவர் இருக்க மாட்டார். ஆலியா மானசா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டால் சின்னய்யா என்ன செய்வார் என்பதே ராஜா ராணி சீரியல் ரசிகர்களின் கவலையாக உள்ளது.

அவசரப்பட வேண்டாம், ஆலியா மானசா போட்டியாளர் என்று விஜய் டிவி அறிவித்தால் தான் அது உண்மை. அதுவரை இது போன்ற பட்டியல்கள் வந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை லைலா கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த அவரோ, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எல்லாமே பொய் என்று தெரிவித்தார். தற்போதைக்கு கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார் என்பது மட்டுமே உண்மை.