வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற அங்காடித்தெரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் மகேஷ். திண்டுக்கல்லை சேர்ந்த இவருக்கு இந்த பட வாய்ப்பு திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்லில் பஸ்ஸுக்காக காத்திருந்த போது எதிர்பாராத விதமாக கிடைத்துள்ளது.

இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றாலும் இதன் பின் இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்களில் சுவடு தெரியாமல் அழிந்து போனது. தனது தற்போதைய நிலைமையை பற்றி மகேஷ் கூறுகையில் அங்காடித் தெரு படத்தில் நடித்த போது எனக்கு சினிமா என்றால் என்னவென்று கூட தெரியாது.

”என்னோட சொந்த ஊர் திண்டுக்கல். வாலிபால் ப்ளேயர் நான். ஸ்கூல் படிச்சுட்டு இருந்தப்போ, பள்ளிகளில் நடக்கும் வாலிபால் போட்டிக்குப் போவேன். அப்படி ஒருமுறை திருநெல்வேலிக்குப் போயிருந்தப்போதான், என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை நடந்தது. பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன். அப்போ, வசந்தபாலன் சாரோட உதவி இயக்குநர் என்னைப் பார்த்தார். ‘அங்காடித் தெரு’ படத்துக்கு நான் செட் ஆவேன்னு அவருக்குத் தோன்றியிருக்கு. என்கிட்ட வந்து என்னைப் பற்றி விசாரிச்சார். ‘அங்காடித் தெரு’ படம் பற்றியும் சொன்னார். அப்போ எனக்கு நம்பிக்கையெல்லாம் வரல. என்னைப் போட்டோ எடுத்துக்கிட்டார். அவருடைய போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போனார்.

மகாராஷ்ட்ராவுக்கு வாலிபால் விளையாடப் போனப்போ, போன் வந்தது. ‘வசந்தபாலன் சார் உங்களைப் பார்க்கணும்’னு சொல்றதா சொன்னாங்க. ‘சென்னையில் ஒரு வாலிபால் போட்டி இருக்கு; அப்போ வந்து பார்க்கிறேன்’னு சொன்னேன். பிறகு சென்னை போனப்போ, வசந்தபாலன் சாரை மீட் பண்ணேன். எனக்கு சில டெஸ்ட் வச்சார். வசனம் கொடுத்துப் பேசச் சொன்னார். எனக்கு எப்படிப் பேசணும் எப்படி நடிக்கணும்… எதுவும் தெரியல. அப்புறம், ஷூட்டிங் போயிட்டோம். அப்போ எனக்கு 17 வயதுதான். ப்ளஸ் டூ படிச்சுக்கிட்டிருந்தேன். நான் சினிமாவுல நடிக்கிறேன்னு சொன்னப்போ, யாருமே நம்பல. ‘அங்காடித் தெரு’ போஸ்டர்கள் ரிலீஸ் ஆனப்போதான், நம்புனாங்க. எனக்கு முன்னாடியே அஞ்சலி சினிமாவுக்கு வந்துட்டாங்க. அதனால, அவங்ககிட்டதான் நடிப்பு பற்றிக் கேட்பேன். அவங்களும் எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. படத்தோட ஷூட்டிங் முழுக்க சென்னை ரங்கநாதன் தெருவுல நடந்தது. மக்கள் கூட்டம் அதிகமா இருக்கிற இடத்துல கேமராவை ஒளிச்சு வச்சுப் படம் எடுத்தாங்க. வசந்தபாலன் சார் எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்தார். படம் ரிலீஸ் ஆச்சு, பெரிய ஹிட்டாச்சு. நான் எங்கே போனாலும், பலரும் வந்து ஆட்டோகிராப் வாங்குனாங்க. இந்தச் சூழல்ல வந்திருந்தா, செல்ஃபி எடுத்திருப்பாங்க. அவ்ளோதான்… நாம வாழ்க்கையில ஜெயிச்சுட்டோம்னு நினைச்சேன். ஆனா, ஜெயிக்க இன்னும் ஓடிக்கிட்டேதான் இருக்கேன்”; என்றவர், தொடர்ந்தார்.

“; ‘அங்காடித் தெரு’ படத்துல நடிச்சப்போ, எனக்கு சினிமான்னா என்னன்னுகூடத் தெரியாது. அந்தப் படத்துக்குப் பிறகு, சினிமாவுல ஸ்டெடியா நிற்க என்ன செய்யணும், எப்படிக் கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு சொல்லித்தர யாரும் இல்லை. அதனால, தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன். அதர்வா நடிச்ச ‘ஈட்டி’ படத்துல நடிக்க டைரக்டர் என்னைத்தான் முதலில் கேட்டார். ‘சுந்தர பாண்டியன்’ படத்துல விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்துல நடிக்கக் கிடைச்ச வாய்ப்பையும் தவரவிட்டுட்டேன். தவிர, நான் நடிச்ச சில படங்களும் சரியா ஓடல. இவையெல்லாம் பெரிய கஷ்டத்தைக் கொடுத்தது. இப்போகூட நான்கு படத்துல நடிக்கிறேன். எல்லாமே அறிமுக இயக்குநர்களின் படங்கள்தான். எனக்குத் திரும்பவும் வசந்தபாலன் சார் படத்துல நடிக்கணும்னு ஆசையா இருக்கு… பார்ப்போம்!”; என்கிறார் மகேஷ்.