வாஷிங்டன்: பெண்கள் மீது காதல் வந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டதால் அது வெறுப்பாகி கொலை செய்யும் அளவிற்கு போய் விடுகிறது. அமெரிக்காவில் கிறிஸ்டோபர் கிளேரி என்ற இளைஞருக்கும் இதே நிலைதான். காதலை நிராகரித்த பெண்ணை மட்டுமல்ல கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி செய்திருக்கிறான். இதில் ஏற்கனவே சிலர் மரணமடைந்திருக்கின்றனர்.

வாஷிங்டனில் கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பிட்ட பகுதிகளில் பெண்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வந்தது. இதற்கு யார் காரணமாக இருக்க முடியும் என்று தலையை பிய்த்துக்கொண்டனர் வாஷிங்டன் காவல்துறையினர். சில தினங்களுக்கு முன்பு வாஷிங்டனில் பொது இடத்தில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கொலரோடாவைச் சேர்ந்த அவரது பெயர் கிரிஸ்டோபர் கிளேரி என்று தெரியவந்தது. பல பெண்கள் துப்பாக்கி சூடு நிகழ்த்தியிருக்கிறான். பொது இடத்தில் பெண்களை சுடுவேன் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறான். அவனது கதையைக் கேட்ட போலீசாருக்கு, தமிழ் சினிமாவில் வரும் கிரைம் திரில்லர், ரொமான்ஸ் கதையை விட பயங்கரமாக இருந்துள்ளது.

காதல் மன்னன்
காதல் நிராகரிப்பு
கொலரோடாவைச் சேர்ந்தவன் கிறிஸ்டோபர் கிளேரி. 27வயதாகும் அவனுக்கு தனது 22வது வயதில் காதல் எட்டிப்பார்த்தது. அன்பு செலுத்த அழகான பெண் வேண்டுமே என்ற ஆசையில் ஒரு பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தினான், ஆனால் அந்த காதல் நிராகரிக்கப்பட்டது. அழகும் திறமையும் கொண்ட தனக்கு காதலிக்கவும், அன்பு செலுத்தவும் பெண் கிடைக்கமாட்டாளா என்று ஏங்கினான் அந்த ஏக்கம் வெறியாக மாறியது.

துப்பாக்கியால் சுடுவேன்
மிரட்டல் எஸ்எம்எஸ்

தனது காதலையும் அன்பையும் நிராகரித்த பெண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பினான். என்கிட்ட நிறைய துப்பாக்கி இருக்கு. அந்த துப்பாக்கியால் உன்னை சுட்டுக்கொல்வேன் என்று மெசேஜ் தட்டிவிட்டான். ஆனால் அந்தப்பெண் அவனது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதனால் பெண்கள் மீது வெறுப்பு அதிகரித்தது.

பெண்கள் சுட்டுக்கொலை

தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பெண்களை சுடத்தொடங்கினான். இதில் சில பெண்கள் படுகாயமடைந்தனர். ஒரு சிலர் உயிரிழந்தனர். ஆனாலும் கிறிஸ்டோபரின் வெறி அடங்கவில்லை. கண்ணில் கண்ட அழகான பெண்களை எல்லாம் சுட்டான். என் காதலையா நிராகரித்தீர்கள் என்று சொல்லி சொல்லி சுடுவானாம்.

கேர்ள் ப்ரண்ட் இல்லையே
நான் இன்னும் விர்ஜின்தான்

எனக்கு 27 வயதாகிறது. எந்த பெண்ணிற்கும் என்னை பிடிக்காம போயிருச்சே. எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் கூட இல்லை. இதுவரைக்கும் நான் எந்த பெண்ணையும் தொட்டது கூட இல்லை. இன்னும் விர்ஜினாகத்தான் இருக்கிறேன். பெண்களின் ஸ்பரிசம் என் மீது படாமல் இப்படியே விர்ஜினாவே செத்துப்போய் விடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறான்.

வெறி அடங்கலையே
பெண்கள் மீதான கோபம்

பெண்கள் மீது நடத்திய தாக்குதலின் போது ஏற்கனவே போலீசில் சிக்கிய கிறிஸ்டோபர், போலீசிடம் கெஞ்சிக் கூத்தாடி வெளியே வந்தான். மறுபடியும் ரோட்டில் அழகான பெண்களைப் பார்த்தால் சுடுவானாம். அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு பெண்ணை சுடும்போது மாட்டிக்கொண்டு தனது சொந்தக்கதை சோகக்கதையை கூறியிருக்கிறான்.

அன்பிற்காக ஏங்குகிறேன்
அன்பு கிடைக்கலையே

எனக்கு வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை. அன்பு ஒன்றே போதும், அன்பிற்காக நான் ஏங்குகிறேன். பெண்களிடம் நான் அன்பை வெளிப்படுத்தினால் யாருமே என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக என்னை திட்டி உதாசீனப்படுத்தினர். இதன்காரணமாகவே எனக்கு பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது என்றும் போலீசாரிடம் உருக்கமாக கூறினான்.

நீதிபதி கருணை
விசித்திரமான வழக்கு

கிறிஸ்டோபரின் கதையைக் கேட்ட காவல்துறையினர், கொலரோடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி கிறிஸ்டின் ஜான்சன், இந்த நீதிமன்றம் எத்தனையே வழக்குகளை சந்தித்திருக்கிறது. இது கொஞ்சம் விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது. அன்பிற்காக ஏங்கும் இளைஞரின் கதை.

5 ஆண்டு சிறை தண்டனை
பெண்கள் பாதிப்பு

கிறிஸ்டோபர் அன்பிற்காக மனதளவில் ஏங்கியிருக்கிறார். இது அவரது பேச்சின் மூலம் தெளிவாக தெரிகிறது என்றார். என்றாலும் அவரது வெறுப்பினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெண்களை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதனை கருத்தில் கொண்டும், கிறிஸ்டோபரின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.