ரஷ்யா நாட்டில் வசித்து வருபவர் யானா டெய்னேஷ். 25 வயது நிறைந்த இவருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் யானாவிற்கு அதிகமான வேலைப்பளு இருந்ததால் அவரால் குழந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை. மேலும் குழந்தையை கவனித்துக் கொள்வதே அவருக்கு மேலும் ஒரு கடினமான வேலையாக இருந்துள்ளது.

அதனால் யானா எப்பொழுதும் குழந்தையின் மீது வெறுப்பை கொட்டி வந்துள்ளார். மேலும் 1 மாதத்திற்கு முன்பு இரண்டு வயது குழந்தையை பெல்ட்டால் அடித்து தாக்கியுள்ளார். இந்நிலையில் குழந்தையை பாரமாக எண்ணிய அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பவுல் கஞ்சியில் 50 கிராம் உப்பை சேர்த்து குழந்தைக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் அதனை குழந்தை சாப்பிட மறுத்துள்ளது. இந்நிலையில் யானா குழந்தையை அடித்து பயமுறுத்தி அதனை சாப்பிட வைத்துள்ளார். குழந்தையும் பயத்தில் வேறு வழி இல்லாமல் அழுதுகொண்டே சாப்பிட்டுள்ளது. பின்னர் ஒரு சில மணி நேரங்களிலேயே குழந்தையின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் பதறியடித்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் இது குறித்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து யானாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது குழந்தையின் உணவில் அதிக அளவு உப்பை சேர்த்து தன் கொலை செய்ததை யானா ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது