சென்னை: நடிகை ரோஜா ஆந்திர பெண்ணாக இருந்தாலும் முதன்முதலில் நடிச்சது இயக்குநர் ஆர்.கே.செல்வ மணியின் செம்பருத்தி படத்தில்தான். இவருக்கு ரோஜா என்கிற பெயரை சூட்டியதும் நம்ம இயக்குநர் இமயம் பாரதி ராஜாதான்.

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். 100 படங்களில் நாயகியாக நடித்த பெருமைக்குரியவர் ரோஜா.

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு இரத்தின கம்பளம் விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்
திடீரென ஆந்திர அரசியல் களத்தில் குதித்தார். ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். இக்கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

சந்திரபாபு நாயுடு
கடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடிக்க, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் எம்எல்ஏவா ஜெயிச்ச இவர், திரும்பவும் சந்திரபாபு நாயுடு கட்சியில் இணைந்துவிடுவார் என்று கூட பேச்சுக்கள் அடிப்பட்டன..

சோதனைகளை
ரோஜாவுக்கு எத்தனை சோதனைகளை சந்திரபாபு நாயுடு கொடுத்தாலும், ரொம்ப ஸ்ட்ராங்கா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார். இதோ இப்போது அந்த கட்சி சார்பாக நகரி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி வாகை சூடியுள்ளார்.

ஆந்திர அமைச்சரவையில்
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்துவிட ரோஜாவுக்கு ஆந்திர அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். நம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மனம் வீசுவது நமக்கு பெருமைதானே..

நடிகை சுமலதா
இவரைப் போல நடிகை சுமலதா நம்ம ஊரில் ரஜினியின் முரட்டு காளை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர். கன்னட நடிகர் அம்பரீஷை கல்யாணம் செய்துகிட்டு செட்டில் ஆனவர்.

வெற்றி களம்
அண்மையில் கணவரை இழந்துவிட்ட இவர்,அரசியலில் பெரும் போராட்டத்துக்கு இடையில் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி களம் கண்டு இருக்கார்.

இந்த இரண்டு பெண்களும் நம் தமிழக திரையுலகில் கோலோச்சி அங்கு சென்று, அரசியலில் ஜொலிப்பது நமக்கு பெருமைதானே…