சென்னை:சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவின் அம்மா,அப்பாவை கண்டு பிடிப்பதில் கதை மும்முரமாப் போகுது.

உண்மையில் ரோஜாதான் வடிவுக்கரசியின் மகளான சென்பகத்தின் மகள் என்றாலும், ஆதாரங்களை மறைச்சு ஏமாத்தி தான்தான் செண்பகத்தின் மகள் என்று வீட்டுக்குள் வந்துடறா அணு.

இவளுக்கும் சாந்த மூர்த்தி ஐயா கொலைக்கும் தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்ட அர்ஜுன் கோவத்துடன் வீட்டுக்கு வர்றான்.

உனக்கும்
அர்ஜுனும்,ரோஜாவும் தனியா பேசிகிட்டு இருக்க, என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்கறா அணு. இதை கண்டு பிடிச்ச அர்ஜுன், அணுவின் கையைப் பிடிச்சு இழுக்கறான்.

என்ன அணு
இங்கே என்ன பண்றே அணு…நாங்க பேசறதை ஒட்டு கேட்டு ஷாக்ஷிக்கிட்ட சொல்ல போறியான்னு கேட்கறான். இல்லையே..நான் சும்மாத்தான் நிக்கறேன்னு சொல்றா.

இவ கன்னத்துல
ரோஜா இவ கன்னத்துல பொளேர்னு ஒரு அறை விடுன்னு சொல்றான் அர்ஜுன்.இல்லை சார் இவளைப் பார்த்தா இன்னிக்கு எனக்கு அடிக்கணும்னு மூடே வர்ல சார்னு சொல்றா ரோஜா.

மாமா அர்ஜுன்
மாமா… என்னை ஏன் அடிக்க சொல்றீங்க… நான் ஒண்ணும் தப்பு பண்ணலை மாமா…நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கறேன் மாமான்னு அணு சொல்றா. அர்ஜுன் சாரை என்னடி சொன்னேன்னு கேட்கறா ரோஜா.

கோவம் வருது
அர்ஜுன் மாமான்னு சொன்னேன்..அவரை இப்போ மட்டுமில்லை.. எப்பவும் என்னோட அர்ஜுன் மாமாதான்..இனியும் அப்படித்தான் கூப்பிடுவேன்னு அணு சொல்றா. சார் இப்போ எனக்கு கோவம் வருது சார்.. என்னடி கூப்பிடுவே..இனிமேர எனக்கு மட்டும்தாண்டி அவர் மாமான்னு அணு கன்னத்துல பொளேர்னு அறை விடறா ரோஜா.

ஐயா சாந்தமூர்த்தி
சாந்தமூர்த்தி ஐயா வெளியில வந்ததும் உன்னோட உண்மை முகம் தெரிஞ்சுரும். சாக்ஷிக்கு உளவு பார்த்து சொல்றியா… நானே உன்னை அடிச்சு இருப்பேன்.. பொம்பளை புள்ளையா போயிட்டே.. அதனாலதான் ரோஜாவை விட்டு அடிக்க சொன்னேன்னு அர்ஜுன் சொல்றான்.