பெரும்பாலானோருக்கும் ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
உடன்பிறந்த சகோதர, சகோதரிகளினால் சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் குறும்புச் செயல்களால் மகிழ்ச்சி பெருகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும் காலமிது. அதன்மூலம் மன நிம்மதி அதிகரிக்கும். உடன் பிறந்தோர்கள் மூலமாக சிறு சிறு மனக்கசப்புகள் வந்து மறையும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

ரிஷபம்

வெகு நாட்களாக செய்ய வேண்டுமென்று மனதுக்குள் நினைத்து வைத்திருந்த செயல்களை பிறர் பாராட்டும்படி மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முக்கியப் பொறுப்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த மறந்து விட வேண்டாம். வெளிநாடு செல்வதற்கான போட்ப்பட்ட திட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்லும். நல்ல காரியங்களுக்கான பொருள், பணம் நன்கொடையாகக் கொடுப்பீர்கள்

மிதுனம்

நீங்கள் கொடுக்கும் சிறந்த வாக்குறுதிகளால் பிறரால் புகழப் படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களினால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் செயல்வேகம் அதிகரிக்கும். புதிய புதிய லட்சியங்களை அடைவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும்.

கடகம்

அடுத்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது தான் என்றாலும் அதிலும் கொஞ்சம் கவனமாக ஈடுபடுங்கள். பண விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சுப விரயச் செலவுகள் ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற போது கொஞ்சம் கவனமாக இருங்கள். பிறருக்கு ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்கின்ற ஆற்றலால் மற்றவர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். பொருள் சேர்க்கையில் மனம் ஈடுபடும். அதற்கு சாதகமான சூழலும் உண்டாகும்.

சிம்மம்

உங்களுடைய பரம்பரை சொத்துக்களினால் சுப விரயங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளினால் உங்களுக்கு பெரும் ஆதரவு உண்டாகும். நட்பு வட்டாரத்தின் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். மனதின் குழப்பத்தினால் உங்களுக்கு மந்தத் தன்மைகள் உண்டாகும். வீட்டில் மனைவியிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். எதிர் விவாதங்களைத் தவிர்த்தல் நல்லது.

கன்னி

தொழில் சம்பந்தப்பட்ட புதிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எந்த முடிவெடுத்தாலும் அதை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து எடுப்பது நல்லது. உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். விவாதங்களின் மூலமும் உங்களுக்கு சாதகமான நிலையே உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதால் சிறுசிறு சுப விரயச் செலவுகள் உண்டாகும். போட்டிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

துலாம்

வீட்டுக்குப் புதிய உறுப்பினர்களுடைய வருகையினால் உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய உடல் நலத்தில் உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி, உடல் நலம் ஏற்படும். பொருள் சேர்க்கையை உண்டாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தாய் வழியிலான உறவுகளின் ஆதரவினால், உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்

புதிய நபர்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களினால் உங்களுக்கு தொழிலில் லாபங்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். புதிய எண்ணங்களுக்காக செயல் திட்டங்களைத் தீட்டி, அதனை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்கள் தங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும்.

தனுசு

போட்டிகளில் நினைத்த காரியங்களை நினைத்த அளவில் வெற்றி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்காகத் திட்டமிடுவீர்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு அவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதுக்குள் இருக்கும் இனம் புரியாத புதிய புதிய எண்ணங்கள் தோன்றும்.

மகரம்

தொழில் ரீதியாக புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஆதரவினால் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வீடு, மனைகள் உண்டாவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

கும்பம்

உங்களுடைய வாக்கு வன்மையினால் பொருளாதார நிலைகள் உயர ஆரம்பிக்கும். நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்புறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் ஆதரவு ஏற்படும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இனிதே நிறைவேற ஆரம்பிக்கும்.

மீனம்

உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்தி, அதன் வெற்றி மூலம் பெருமை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் மிக நிதானமாகச் செய்ய வேண்டும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும்.