சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரியாகி இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அடுத்த வாரம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள என் ஜி கே படம் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரகுல். அதில் அவர் உள்ளாடை போன்ற மேலாடையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்துள்ளார். ஆனால் அப்பேண்ட்டிற்கு அவர் பட்டன் போடவில்லை.

இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டு ஆறு மணி நேரங்கள் தான் ஆகிறது. ஆனால், இதுவரை அதனை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.

அவற்றில் ரகுலின் அழகைப் பலர் பாராட்டியுள்ளனர். அதே சமயம் இப்படிப்பட்ட அரைகுறை ஆடை அவருக்குப் பொருந்தவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு சிலர் குறிப்பாக, ‘ரகுல் உங்கள் பேண்ட்டிற்கு பட்டன் போடவில்லையே, மறந்து விட்டீர்களா?’ எனக் கேட்டுள்ளனர்.