சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா தன் அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போயிருக்கா.

தன் காதலனுடன் ஹைதராபாத் போயிருக்கும் அவளுக்கு தன் பெற்றோரைப் பத்தின சின்ன ஆதாரம் கூட இல்லை.

தனது அம்மா அப்பாவின் தங்கைன்னு மட்டும்தான் தெரியும். அப்பா ஹைதராபாத்தில் பிசின்ஸ் செய்தார் என்கிற தகவல் மட்டும் தெரியும்.

நீலாம்பரிக்கு
பயம்
நீலாம்பரிக்கு நிலா ஏதாவது ஆதாரத்தை கண்டு பிடிச்சுட்டா என்ன பண்றதுன்னு பயம். தன் உண்மை முகம் தெரிஞ்சுட்டா ஆபத்து வந்துரும்னு முன் எச்சரிக்கையா இருக்காங்க.

நீலாம்பரி
வீரபத்ரன்

நீலாம்பரி வீரபத்ரனை விட்டு நிலாவை ஃபாலோ செய்து, அவளை பயமுறுத்தி சென்னைக்கு திரும்ப வைக்க ஏற்பாடு செய்யறாங்க.நிலா அப்பாவைக் கண்டு பிடிக்க, சிறந்த தொழிலதிபர் விருது வாங்கின வருஷத்தை ஒருத்தர் சொல்ல, அந்த விருது வழங்கும் விழாவை போட்டோ எடுத்தவரை கண்டுபிடிச்சு அந்த போட்டோவை எடுத்து வைக்க சொல்லிட்டு வர்றாங்க.

போட்டோவில்
நீலாம்பரியுடன்

போட்டோவில் நீலாம்பரியுடன் நிலாவின் அப்பா விருது வாங்கிய போட்டோவை போட்டோகிராபர் தேடிக்கண்டு பிடிச்சு எடுத்து வச்சுடறார், அதை வாங்க நிலா வருவதற்குள்,வீரபத்ரன் போட்டோ கிராபரை கொன்று விடுகிறான்.

நிலாவின்
அப்பா

ஆனால், நிலாவின் அப்பா ஸ்ரீதர் உயிரோடு ஹைதராபாத்தில் இருக்கார்.இஸ்லாமியராக மாறி ஒரு டாக்சி டிரைவராக.அவர் நிலாவை ஆபத்திலிருந்து காப்பாத்தி, தமிழாம்மா… ஜாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்லிட்டு போறார்..

ஆனால், பாவம் நிலாவுக்கு இவர்தான் தனது அப்பான்னு தெரியாதே….