தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், சுப்ரீம் ஸ்டார், சரத்குமார், தல அஜித், தளபதி விஜய், லிட்டில் ஸ்டார் சிம்பு உட்பட பல மாஸ் ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியவர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள். இவரது இயக்கத்தில் பல படங்கள் மெகாஹிட் ஆகியுள்ளது.

குறிப்பாக இவரது இயக்கத்தில் சரத்குமார் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான மெகாஹிட் திரைப்படம் நாட்டாமை. இப்படம் நடிகராக சரத்குமார் அவர்களுக்கும், இயக்குநராக கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கும் இவர்களது திரைவாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தில் விஜயகுமார், மீனா, குஷ்பு, மனோரமா, பொன்னம்பலம்,கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர். சிற்பியின் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்து தமிழ்நாட்டின் பட்டி-தொட்டிகளெல்லாம் ஒலித்தது. குறிப்பாக இப்படம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சிறப்பாக ஓடி வசூலையும் வாரிகுவித்தது. படத்தை பார்க்க கிராம மக்கள் வண்டி கட்டிக்கொண்டு சாரை சரையாக திரையரங்கை நோக்கி படையெடுத்தனர்.

படத்தில் விஜயகுமார் அவர்கள் சரத்குமாரின் அப்பா வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் ஆரம்பத்தில் ரவிகுமார் அவர்கள் எழுதிய கதையில் சரத்குமாரின் அண்ணன் கேரக்டரில் விஜயகுமாரை நடிக்க வைக்க இருந்தாராம். பின்னர் கதையில் சில மாற்றங்களை செய்து, சரத்குமாரை அண்ணன்-தம்பி கேரக்டராக இரட்டை வேடங்களிலும், விஜயகுமாரை அப்பா கேரக்டராகவும் நடிக்க வைத்தார்.

இந்நிலையில் படத்தில் சரத்குமார் கேரக்டரில் நடிக்க வைக்க இயக்குநர் ரவிகுமார் அவர்கள் முதலில் அணுகியது மலையாள சினிமாவின் மெகாஸ்டார் என்று அழைக்கபடும் நடிகர் மம்முட்டி அவர்களைதானாம். ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பின்னரே படத்தில் சரத்குமார் ஒப்பந்தம் செய்யபட்டாராம். மேலும் விஜயகுமார் நடித்த கேரக்டரில் இயக்குநர் பாரதிராஜாவைதான் நடிக்க வைக்க எண்ணியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.