பெங்களூரு: நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றது அந்த மாநிலத்தில் இன்னும் பரபரப்பை குறைத்த பாடில்லை. காரணம், சுமலதா தோற்பார் என்றுதான் அனைவரும் கருதினர். ஆனால் காங்கிரஸிலிருந்தும், பாஜகவிலிருந்தும் வந்து குவிந்த ஆதரவால் சுமலதா வெற்றி பெற்று விட்டார்.

சுமலதா வேறு யாரும் இல்லை, மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவிதான். ரஜினி உள்ளிட்டோருடன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். கணவர் மறைவுக்குப் பின்னர் அவருக்கு உள்ள நற்பெயரை வைத்து நம்பிக்கையுடன் மாண்டியா லோக்சபா தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

சுமலதா போட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், அவர் எதிர்த்து நின்றது கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி கெளடா என்பதால். குமாரசாமியும், தனது மகன் எப்படியும் ஜெயிப்பார் என்ற பெரு நம்பிக்கையில் இருந்தார். காரணம், மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸின் வாக்கு வங்கி தனது மகனுக்கு சாதகமாக இருக்கும் என்பதால்.
குமாரசாமி
காலை வாரிவிட்டனர்
ஆனால் குமாரசாமி போட்ட கணக்கு.. அந்த குமாரசாமி போட்ட கணக்கு போல தப்புக் கணக்காகி விட்டது. யாரை அதிகம் நம்பினாரோ அவர்கள்தான் குமாரசாமியை காலை வாரி விட்டு விட்டனர். இதனால் சுமலதா வென்றார், குமாரசாமி மகன் தோற்றுப் போய் விட்டார். நடந்தது என்னன்னா இதுதான்.

மாண்டியா
நிகில் குமாரசாமி

மாண்டியா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டு 8 சட்டசபைத் தொகுதிகள் வருகின்றன. இந்த எட்டிலும் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று மதச்சார்பற்ற ஜனதாதளம் ஜெயித்தது. இந்த நிலையில் மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடப் போகிறார் என்று தெரிந்ததும் தோல்வியுற்ற 8 காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அதிருப்தி
கடுப்பான எம்எல்ஏக்கள்

அதிருப்தியில் இருந்து வந்த செலுவராயசாமி, நரேந்திர சாமி, ரமேஷ் பன்சித்தகெளடா, சந்திரசேகர் உள்ளிட்டோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் குமாரசாமி இறங்கவில்லை. மாறாக எனது கட்சியினரே போதும், காங்கிரஸ் மேலிடம் வேண்டுமானால் இவர்களுடன் பேசட்டும் என்று இருந்து விட்டார். இதனால் தோற்ற எம்எல்ஏக்கள் கடுப்பாகி விட்டனர்.

மாண்டியா
பாஜக ஆதரவு

சுமலதா மாண்டியாவில் நிற்பதை அறிந்ததும், ரகசியமாக அவருக்கு ஆதரவாக இவர்கள் திரும்பினர். இவர்களது ஆதரவு காங்கிரஸாரும் சுமலதாவுக்காக வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர். மறுபக்கம், எதிரிக்கு எதிரி நண்பர் என்ற அடிப்படையில் குமாரசாமிக்கு எதிராக களம் கண்ட சுமலதாவுக்கு பாஜகவும் ஆதரவு அளித்தது. இப்படி எதிர்பாராத வகையில் இரு பெரும் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால் சுமலதா ஹேப்பியாகி விட்டார். கடைசியில் ஒன்னே கால் லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

அனுதாப அலை
குமாரசாமி

கணவரின் பெயர், அவர் மீதான அனுதாப அலை ஆகியவற்றை மட்டுமே நம்பி நின்ற சுமலதாவுக்கு காங்கிரஸார் இப்படி மறைமுகமாக ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைத்தது குமாரசாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.