மதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. ரிஷபம் ராசிக்காரர்களுக்க இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவும் வரும் கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து ரிஷபம் ராசிக்காரர்களுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு, சனி, ராகு கேது கிரகங்கள் இப்போது உள்ள ராசிகளிலேயே இருக்கும். மிகப்பெரிய மாற்றங்கள் என்றால் மாத கோள்களான சூரியன் 15 நாட்கள் ரிஷப ராசியிலும் 15 நாட்கள் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார். அதே போல புதன் 2ஆம் தேதி ரிஷபத்தில் மிதுனத்திற்கும் 20ஆம் தேதி கடகத்திற்கு இடம் மாறுகிறார். சுக்கிரன் 4ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் மாறுகிறார். 28ஆம் தேதி மிதுனத்திற்கு இடம் மாறுகிறார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து 23ஆம் தேதி கடகத்திற்கு மாறுகிறார்.

மே மாதம் சாதகமாக இருந்த கிரகங்கள் சங்கடமான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களுடன் கூட்டணி சேருவதால் கொஞ்சம் கவனமாகவே இருப்பது அவசியம். இந்த மாதம் ராசிக்கு 12ல் சுக்கிரன் சுக்கிரன், ராசியில் புதன், சூரியன், இரண்டாம் வீட்டில் ராகு செவ்வாய் ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சூரியன் ராகு, புதன் செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன.

பணவரவு அதிகரிக்கும்
வருமானம் அதிகரிக்கும்
விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார் மாத ஆரம்பத்தில் சுப விரையங்கள் ஏற்படும். ராசியில் உள்ள புதன் உங்க தன ஸ்தானத்திற்கு நகர்வதால் பணவரவு அதிகரிக்கும் எப்போதோ கடன் கொடுத்த பணம் திரும்ப வராது என்று நினைத்திருந்த பணம் இந்த மாதம் உங்களைத் தேடி வரும்.

முகத்தில் பொலிவு
அழகு ஆரோக்கியம் கூடும்

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமர்கிறார். இது மாளவியா யோகத்தை தருகிறது. முகத்தில் அழகும், பொலிவும் கூடும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இந்த மாதத்தில் பிற கிரகங்களினால் ஏற்படும் கெடு பலன்களை தடுத்து உங்களை பாதுகாப்பார். தைரியம் கூடும். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.

தடை தாமதம் ஏற்படும்
தடைகளை தகர்ப்பீர்கள்

வேலை செய்யும் இடத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் புரமோசன் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கத்தான் செய்யும் காரணம் எட்டாம் வீட்டில் சனி கேது சேர்க்கை பெற்றிருக்கின்றனர். வக்ரமடைந்து பின்னோக்கி நகர்வதால் இத்தகைய தடைகளை ஏற்படுத்துகின்றனர். அதே போல இரண்டாம் வீட்டில் செவ்வாய் உடன் சர்ப்ப கிரகமான ராகுவின் சேர்க்கும் பாதிப்புகளையும், செயல்களில் தடைகளையும் ஏற்படுத்துவார். மாத இறுதியில் கிரகங்களின் நகர்வினால் தடைகளை தகர்த்து வெற்றி பெறுவீர்கள்.

மவுன விரதம் நல்லது
வாக்கு வாதம் வேண்டாம்

நாக்கில் சனியா என்று கேட்பார்கள். காரணம் பேசுவதெல்லாம் வம்பு வழக்கில் முடியும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கவனம் தேவை. வீட்டிலோ, வெளியிடங்களிலோ வாக்குவாதத்தை தவிருங்கள். வாக்கு வாதம் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த மாதம் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். செவ்வாய் ராகு குடும்ப உறவுகளை பாதிக்கும் தொல்லைகள் ஏற்படும். பொறுமை அவசியம். சகிப்புத்தன்மை தேவை. புரிந்து செயல்படுங்கள்.

வெளிநாட்டு யோகம்
குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்

மாத தொடக்கத்தில் எந்த படிப்பை தேர்வு செய்வது என்ற குழப்பத்தை சர்ப்ப கிரகங்கள் ஏற்படுத்துவார்கள். மாத இறுதியில்

மாணவர்கள் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும். இந்த மாதம் யாருக்கும் பணம் கடன் தர வேண்டாம். வரவு ஒரு மடங்கு வந்தால் செலவு இரண்டு மடங்கு வரும். கவனம் தேவை. மருத்துவர் ஆலோசனை அவசியம்.

காதல் மலரும் காலம்

4ஆம் தேதியில் இருந்து ரிஷபத்தில் உள்ள சுக்கிரன் மீது குருவின் பார்வை நேரடியாக இருப்பதால் காதல் மலரும் காலம். திருமணத்தில் கனிய வாய்ப்பு இல்லை காரணம் ராகு செவ்வாய் சேர்க்கை சனி கேது பார்வைதான். 23ஆம் தேதிக்கும் மேல் லேசாக நல்லது நடைபெறுவது போல இருந்தாலும் சனி கேது விடாது. தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும்.

கவனம் தேவை
அஷ்டமத்து சனியால் பாதிப்பு

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம், ரொம்ப பாதுகாப்பு தேவை. அஷ்டமத்து சனியால் பொருள் தொலையும். இந்த மாதம் கவனம் தேவை. தைரியம் தன்னம்பிக்கை தேவை. குல தெய்வத்தை சரணடையுங்கள் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கலாம்.