ஜப்பான் நாட்டில் இரண்டு முலாம்பழங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 31 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் யுபாரி நகரிலுள்ள மொத்த விற்பனை சந்தையில் ஆரஞ்சு வண்ண சதைப்பகுதியுடைய முலாம்பழங்களின் ஏலம் நடைபெற்றது. அதில் சுமார் ஆயிரம் பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், இரண்டு முலாம்பழங்கள் வரலாறு காணாத விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளன.

5 மில்லியன் ஜப்பான் யென்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 31 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு இந்த முலாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இனிப்பு சுவை மிக்க ஆரஞ்சு வண்ண சதைப்பகுதி மற்றும் உகந்த பருவநிலையில் விளைந்த பழங்களின் தரம் ஆகிய காரணங்களுக்காக, இவ்வகை முலாம்பழங்களுக்கு அதிக விலை கிடைப்பது வழக்கமென்றாலும், இவ்வளவு பெரிய தொகைக்கும் ஏலம் எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த இரு பழங்களும் வரும் 29ம் திகதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.