இந்தியாவில் வயிற்று வலி என்று கூறிய நபரின் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது உள்ளே இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இமாச்சலப்பிரேதசத்தில் உள்ள மாண்டி நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க நபர் வயிற்று வலி என்று கூறி சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அப்போது முதலில் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் என்று கூறியதால், ஸ்கேன் செய்துள்ளனர்.

அதன் பின் ஸ்கேனைப் பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவரின் வயிற்றின் உள்ளே 8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி இருந்துள்ளது.

இதனால் இவை எல்லாம் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்று மருத்துவர்கள் கேட்ட போது, அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். முதலில் வயிற்றில் இருப்பவைகள் நீக்க வேண்டும் என்பதால் உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பொருட்களை அகற்றியுள்ளனர்.

இதுபற்றி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிகில் கூறும்போது, வயிற்றுக்குள் அந்த பொருட்கள் இருந்ததை அறிந்ததும் எங்கள் மருத்துவக் குழு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அவற்றை நீக்கியது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். சாதாரணமான மனிதர்கள் கத்தி, ஸ்குரூடிரைவர், ஸ்பூன்களை விழுங்க மாட்டார்கள். நோயாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இதை செய்திருக்கிறார். இது அரிதான ஒன்று என்று கூறியுள்ளார்.