பெங்களூரு: என்னோட பிள்ளை வேற மாதிரி இருக்கானே என்று சந்தேகப்பட்டு காதலித்து கரம் பிடித்த மனைவியை சிசிடிவி கேமராவை வைத்து டிடெக்டிவ் மூலம் கண்காணித்திருக்கிறார் ஒரு கணவர். இதைக் கண்டுபிடித்த மனைவி, கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவனின் மண்டையை பிளந்திருக்கிறாள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஜெயநகரில் அழகான இளம் பெண்ணைப் பார்த்த உடன் காதல் வயப்பட்ட அந்த நபர் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறினான். ஆனால் அந்த காதலை அந்தப்பெண் ஏற்கவில்லை. மூன்று வருடங்கள் தொடர்ந்து விரட்டி விரட்டி காதலித்து அந்த பெண்ணின் மனதை கரைத்தான். ஒருவழியாக சம்மதிக்கவே, பெங்களூரு வீதிகளில் சுற்றித்திரிந்த காதல் ஜோடி ஒருவழியாக 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

காதல் வாழ்க்கையின் சாட்சியாக இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அங்கேதான் வெடித்தது பூகம்பம். நானும் சிவப்பு… என் பொண்டாட்டியும் சிவப்பு… புள்ளை மட்டும் கறுப்பா இருக்கானே எப்படி ஜனகராஜ் பாணியில் யோசித்து மண்டையை குழப்பிக்கொண்டான் அந்த சந்தேக கணவன்.

டிடெக்டிவ் ஏஜென்சி
கண்காணித்த கணவன்
மனைவி மீது நாளுக்கு நாள் சந்தேகம் கூடிக்கொண்டே போனது. எங்கே போனாலும் கண்காணித்தான் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் சொல்லி பல இடங்களில் ரகசியமாக 22 கேமராக்களை வைத்தான் அதனை தனது மொபைல் போன் மூலம் கண்காணித்தான் அந்த சந்தேக புத்தி கணவன். இனி அவ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று கூறி தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் அவன்.

வீட்டுக்கு வந்தது யார்
அதிகரித்த சந்தேகம்

ஆபிசிற்கு போனாலும் வீட்டில் மனைவி என்ன செய்கிறாளோ? யாருடன் பேசுகிறாளோ? வீட்டிற்கு யாராவது வருகிறார்களோ என்ற சந்தேகத்துடனேயே இருந்தான். அவ்வப்போது சிசிடிவி காட்சிகளையும் பார்த்தான். கணவன் இல்லாத நேரத்தில் ஒருநாள் வீட்டிற்கு மனைவியின் அத்தை பையன் வந்து பேசிவிட்டு போனதை கண்டு பிடித்த அவனுக்கு சந்தேகம் அதிகரித்தது.

கண்டுபிடித்த மனைவி
மனைவியிடம் கேட்ட கணவன்

நான் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்தது யார் என்று மனைவியிடம் கணவன் கேட்கவே, அந்த பெண்ணிற்கு சுருக்கென்றது. நாம சொல்லாம நம்ம வீட்டுக்கு அத்தை பையன் வந்தது எப்படி தெரியும் என்று யோசிக்கவே, கணவர் தன்னை கண்காணிப்பது தெரியவந்தது. கணவனிடம் சண்டை போடவே அடிதடி ரகளையாக மாறியது.

சந்தேகமாடா படுற
கிரிக்கெட் பேட்டில் அடி

மனைவியின் ஆத்திரம் எல்லை மீறியது. வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவன் மண்டையில் அடிக்க ரத்தம் கொட்டியது. அசராத அந்த பெண், பெண்களுக்கான அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசி அவர்களை வரவழைத்தார். கணவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த உதவி மைய அமைப்பினர். அந்த பெண்ணிற்கு மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர். சந்தேகப்பட்ட கணவனின் மண்டையை மனைவி பிளந்த சம்பவம் பெங்களூரு ஜெயநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.