இந்து மதத்தில் இருக்கும் அனைவருமே கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனிபகவான்தான். ஏனெனில் வாழும்போதே நமது தவறுகளுக்கான தண்டனையை வழங்குவது அவர்தான். சனிபகவான் ஒருவரின் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படப்போகும் இன்னல்களுக்கு அளவே இருக்காது.

சனிபகவானின் சக்தி, அவரின் மகிமை பற்றி நாம் நன்கு அறிவோம். ஆனால் அவரின் குடும்பத்தை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சனிபகவான் பிறந்த போது அவரின் தந்தையான சூரியபகவான் அவரை தன் மகனாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. சூரியபகவான் சனிதேவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?

தேவி சாயா
தேவி சாயாதான் சூரியபகவானின் மனைவி ஆவார். சனிபகவான் கர்ப்பத்தில் இருந்தபோது அவர் சிவபெருமான் மீது தீவிர பக்தியில் இருந்தார். தன் உடல், பொருள், ஆவி என அனைத்திலும் சிவபெருமானையே நினைத்து கொண்டிருந்ததால் அவர் தன் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க தவறிவிட்டார். இதனால் அவரின் ஆரோக்கியம் மோசமடைந்தது, மேலும் இது அவரின் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதித்தது. இதன் விளைவாக குழந்தை மிகவும் பலவீனமாகவும், இருண்ட நிறத்திலும் பிறந்தது.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
சூரியதேவரின் நிராகரிப்பு

தனது மகன் தன்னை போல பிரகாசத்துடன் இல்லாமல் மிகவும் பலவீனமாகவும், இருண்ட நிறத்திலும் இருந்ததால் சூரியாகவான் சனியை தன் மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தனது மனைவி சாயாவையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவரின் நிராகரிப்பால் தாய், மகன் இருவரும் பெரிய துன்பத்திற்கு ஆளானார்கள்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
சனிபகவானின் தவம்

தனது தந்தையை போலவே சக்தியும், ஆற்றலும் வேண்டுமென்பதற்காக சனிபகவான் தனது குழந்தை பருவத்தை தியாக செய்தார்.சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். சனிபகவானின் பக்தியையும், நோக்கத்தையும் பாராட்டி சிவபெருமான் அவருக்கு காட்டிக்கொடுத்தார். மேலும் மனிதர்களின் தவறுகளுக்கு தண்டனைகளையும், அவர்களின் நல்ல செயல்களுக்கு வெகுமதியும் தரும் வரத்தை சனிபகவானுக்கு வழங்கினார்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
சூர்ய சித்தாந்தம்

சூர்ய சித்தாந்ததின் படி சனிபகவான் தீய காரியங்கள் செய்பவர்களின் மீது தனது துன்மார்க்க பார்வையை வீசும் நித்தியத்துவத்தை அடைந்தார். அவரின் சக்தியை கொண்டு எந்த கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் கொடுங்க அவரால் முடியும்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
சிவபெருமானின் வரம்

இந்த சக்திகள் மூலம் சனிபகவான் தனக்கான இடத்தை தானே உருவாக்கி கொண்டார். தனது கோபப்பார்வை மூலம் தனது தந்தையையும் அவர் தண்டித்தார். வஞ்சகள் மற்றும் துரோகம் செய்பவர்கள், பாவங்களை பற்றி பயப்படாதவர்கள், மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படுபவர்கள், மற்றவர்களின் வாழ்க்கையை கெடுப்பவர்கள் என யாரும் சனிபகவானிடம் இருந்து தப்ப முடியாது. அவர்களின் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
நவகிரகம்

சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயரை வழிபட கூறுவார்கள். நவகிரகங்களின் தலைவரான சூரியபகவன்தான் ஆஞ்சநேயரின் குரு ஆவார். குருதட்சணை செலுத்துவதற்காக அனுமன் எதையும் செய்ய தயாராகி இருப்பதாக கூறினார்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
சூரியபகவானின் கோரிக்கை

பல வறுபுறுத்தலுக்கு பிறகு சூரியபகவான் தன் மகன் சனிபகவானை வீட்டிற்கு அழைத்து வரும்படி அனுமனிடம் வேண்டினார். அனுமனும் அதற்கு ஒப்புக்கொண்டு சனிபகவானை பார்க்க சென்றார்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
அனுமனும், சனிபகவானும்

சனிபகவானை சந்தித்த அனுமன் சூரியபவானின் கோரிக்கையை கூறினார். அனுமனை பார்த்த சனிபகவான் அவரின் தோற்றத்தையும், வாலையும் கண்டு அவரை எள்ளி நகையாடினார் மேலும் அவரின் கோரிக்கையை நிராகரித்தார்.

சனிபகவானை ஏன் சூரியபகவான் தன் மகனாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார் தெரியுமா?
சனிபகவானின் அழுகை

அதனை கண்டு கோபமுற்ற அனுமன் தந்தது வாலால் அவரை சுற்றினார், அதன்பின் வாலை இறுக்க தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு மேல் சனிபகவனால் வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் அனுமனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறினார். தனது சக்தியை இனி தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று வாக்களித்தார். அதனாலதான் அனுமனை வழிபடுபவர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.