சிறுநீரக தொற்று என்பது அனைவரையும் பாதிக்க கூடிய தொற்றாகும். அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த தொற்றால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.

சிறுநீரக பாதையில் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்நுழையும் போது இந்த தொற்று ஏற்படுகிறது.

காரணங்கள்
வயதாகுதல், சிறுநீரக பாதையில் ஏற்படும் அழற்சி, சிறுநீரக கத்ரீட்டர், சிறுநீரக பாதை பாதிப்பு, பெண்களுக்கு இருக்கும் குறுகிய சிறுநீரக பாதை, புரோஸ்டேட் பெரிதாக இருத்தல், மலம் கழித்தலில் சிக்கல், கருவுறுதல், டயாபெட்டீஸ் போன்ற பிரச்சினைகளால் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்படுகிறது.

அறிகுறிகள்

சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டால் நுரையுடன் சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம், மாவு போன்ற வாசனை, வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாக சிறுநீர் கழிக்க முற்படுதல், அடிவயிற்றில் அழுத்தம் மற்றும் முதுகு வலி ஏற்படுதல்.

வாழ்க்கை முறை மற்றும் உணவில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்த சிறுநீரக பாதை தொற்றை தடுக்க முடியும்.

அதிகமாக தண்ணீர் பருகுங்கள்

சிறுநீரக பாதை தொற்றை சரிசெய்ய அதிகப்படியான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரக பாதையில் உள்ள பாக்டீரியாக்கள் அலசி வெளியேற்றப்படும். மேலும் எரிச்சல், வலி எதுவும் இல்லாமல் சிறுநீரை வெளியேற்ற முடியும்.

தினசரி 8-10 கிளாஸ் தண்ணீரையாவது குடியுங்கள். பழங்கள் மற்றும் காய்கறி ஜூஸ்களை ஸ்மூத்திகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்
சூப் மற்றும் புரோத் போன்றவை உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.

குறிப்பு

உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு இருந்தால் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி கொள்ளுங்கள்.

சுத்தமாக இருத்தல்

சுத்தமாக இருப்பது உங்கள் சிறுநீரக பாதைக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தருகிறது.

பாத்ரூம் போன பிறகு சிறுநீரக பாதையை நன்றாக கழுவியோ அல்லது பேப்பர் கொண்டோ சுத்தம் செய்ய வேண்டும். இது பாக்டீரியா தொற்று வர விடாமல் தடுக்கும். ஒரே டிஸ்யூ பேப்பரை 2 தடவை பயன்படுத்துவதை தவிருங்கள்.

சிறுநீரக பாதையில் சோப்பு, டியோட்ரெண்ட் போன்ற நறுமண பொருட்களை உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் இந்த கெமிக்கல்கள் சிறுநீரக பாதையில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அழித்து விட வாய்ப்புள்ளது.

டெம்போன்ஸ்க்கு பதிலாக சேனட்ரி பேட்ஸ்களை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் பேடுகளை நீண்ட இடைவெளியில் மாற்றிக் கொள்ளுங்கள்.

தினமு‌ம் தண்ணீர் ஊற்றி குளியுங்கள், சோப்பு நீரில் பாத் டப்பில் உட்கார்ந்து குளிப்பதை தவிருங்கள்.

பாத்ரூம்யை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சிறுநீரை முழுமையாக வெளியேற்றுங்கள். சிறுநீரை கழிக்காமல் அதிக நேரம் அடக்கி வைப்பது பாக்டீரியா தொற்று பெருக வாய்ப்புள்ளது.

இது சிறுநீரகத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிறுநீர்க் கழிக்க அவசரம் ஏற்படும் போது உடனடியாக பாத்ரூமை அணுகி விடுவது நல்லது. சிறுநீர் முழுவதையும் கழித்து சிறுநீர்ப் பையை வெற்றிடம் ஆக்கிக் கொள்ளுங்கள்.

உடலுறவிற்கு பின்னர் சிறுநீரகம் கழிப்பது அங்குள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றி விடும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால் சிறுநீரக பாதை பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் நாளை ஒரு கிளாஸ் லெமன் ஜூஸில் தொடங்க வேண்டும்.
2-3 கப் க்ரீன் டீயை தினமு‌ம் குடிக்க வேண்டும்

படுக்கைக்கு போவதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மஞ்சள் பாலை அருந்துங்கள்.

விட்டமின் சி உணவுகளான பிரக்கோலி, கிவி, பெல் பெப்பர்ஸ், ஸ்ட்ரா பெர்ரி, முளைக்கட்டிய பயிறு வகைகள், தக்காளி, சர்க்கரை இல்லாத க்ரான் பெர்ரி ஜூஸ் இந்த உணவுகள் சிறுநீரக பாதை பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுவதோடு அதை பரவாமல் தடுக்கவும் செய்கிறது.

விட்டமின் டி அடங்கிய உணவுகளான சால்மன், மெக்கொரல், ஆர்கன் மாமிசம், சீஸ், முட்டை கரு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இஞ்சி மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள் சிடார் வினிகர்

சிறுநீரக பாதை தொற்றை சரி செய்ய வடிகட்டாத ஆப்பிள் சிடார் வினிகரை குடித்து வரலாம். இந்த ஆப்பிள் சிடார் வினிகரில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது உடலின் pHஅளவை சமநிலைப்படுத்துகிறது.

1-2 டேபிள்ஸ்பூன் வடிகட்டாத ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடியுங்கள்.

இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து கொள்ளுங்கள்.

இதை தினமும் இரண்டு தடவை குடித்து வந்தால் சிறுநீரக தொற்று ஓடி விடும்.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்

சில மாத்திரைகள் கூட சிறுநீரக தொற்றை ஏற்படுத்தும். டயாபிராம் அல்லது ஸ்பெர்ம்சைடு, நானோக்ஸினோல்-9 போன்ற பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை தவிர்க்கலாம்.

டயாபிரம் பயன்படுத்தும் போது சிறுநீர் கழிக்கும் அளவை குறைத்து சீக்கிரம் சிறுநீரக தொற்று ஏற்படச் செய்து விடும். ஸ்பெர்ம்சைடு சரும எரிச்சல், பாக்டீரியா க்களின் வளர்ச்சி அவற்றை ஏற்படுத்தும். அதே மாதிரி பெண்கள் போடும் சில பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைத்து வெஜினா பகுதி திசுக்கள் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நாள்பட்ட சிறுநீரக பாதை தொற்று மற்றும் ஈஸ்ட் தொற்று இருந்தால் மருத்துவை அணுகி ஆலோசித்து கொள்வது நல்லது.

புகைப்பிடித்தலை விட்டு விடுங்கள்

புகைப்பிடித்தல் பழக்கம் கூட சிறுநீரக பாதையில் தொற்றை ஏற்படுத்துகிறது. சிறுநீரகத்தில் கேன்சரை உண்டு பண்ணுகிறது. சிகரெட்டில் உள்ள கெமிக்கல்கள் சிறுநீரக பாதை தொற்றை தடுக்கும் ஆன்டி பாக்டீரியல் பொருளான லுகோசைட்டுக்கு எதிராக செயல்படுகிறது.

எனவே சிறுநீரக பாதை தொற்றை தடுக்க வேன்டுமெனில் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.

செளகரியமான ஆடைகள்

செளகரியமான உள்ளாடைகள் அணிவதன் மூலம் சிறுநீரக பாதை தொற்றை சரி செய்யலாம். காட்டன், சிஃப்பான் போன்ற ஆடைகள் உங்களுக்கு காற்றோட்டமானதாக இருக்கும். இதனால் பாக்டீரியாக்கள் சிறுநீரக பாதையை தொற்றக் கூடிய வாய்ப்புகள் குறையும்.

காற்றோட்டமான பேண்ட், ஸ்கர்ட் போன்றவற்றை உடுத்தலாம். இது பாக்டீரியா பெருக்கத்தை குறைக்கும்.

இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான உள்ளாடைகள் காற்றோட்டம் இல்லாமல் வியர்த்து சீக்கிரமே நோய்த் தொற்று ஏற்படலாம்.

காட்டன் உள்ளாடைகள் அணிவது, தினமும் உள்ளாடைகளை மாற்றுவது, மைல்டு டிடர்ஜெண்ட் வைத்து சுத்தம் செய்வது நல்லது.

ஈரமான நீச்சல் உடையுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்.

புரோபயோடிக் யோகார்ட்

தினமும் யோகார்ட்டை எடுத்துக் கொள்வது சிறுநீரக பாதை தொற்றை தடுக்கிறது. ஏனெனில் இதில் மில்லியன் கணக்கில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இது கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும்.

இது ஆரோக்கியமான pH அளவை பராமரிக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

தினசரி 2-3 கப் யோகார்ட்டை உணவில் சேர்த்து வரலாம்.

யோகார்ட் கலவையில் ஸ்மூத்தி கூட குடிக்கலாம்.

க்கெவிர், மிசோ, சாஸ்க்ரப்ட், கிமிச்சி, டெம்போ, புளிப்பான ஊறுகாய் கூட பயன்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சில உணவுகள் உங்கள் சிறுநீரக பாதையில் எரிச்சலை எரிச்சலை ஏற்படுத்தும். அந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

காபினேட்டேடு பானங்களான டீ, காபி போன்றவற்றை தவிருங்கள். அதற்கு பதிலாக காஃபைன் இல்லாத மூலிகை டீயை பயன்படுத்தலாம். சாக்லேட் மற்றும் சோடா பானங்கள் போன்றவைகளும் காபினேட்டேடு பானங்களை தவிர்க்க வேண்டும்.

பீர், வொயின், ஆல்கஹாலிக் பானங்கள் போன்றவை சிறுநீரக பாதையில் எரிச்சலையும், நீர்ச்சத்து பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.

காரசாரமான உணவுகளை தவிருங்கள். இனிப்பான உணவுகள் மற்றும் செயற்கை இனிப்புச் சுவையூட்டிகளை தவிருங்கள்.