நடிகர் விஷாலின் திருமணம் நடிகர் சங்கக் கட்டடத்தில் நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஷாலின் திருமணம் நடிகர் சங்கக் கட்டடத்தில் நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஷால் திருமணம் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட போது, புதிதாக கட்டப்படும் சங்கக் கட்டடத்தில் தான் தனது திருமணம் நடக்கும் என அறிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் திருமணம் பற்றி எப்போது கேட்டாலும், இதே பதிலையே சொல்லி வந்தார் விஷால்.

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவுடன் நடிகர் விஷாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முதல்பட ஹீரோவிடம் சென்று வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை.. அப்போ அதெல்லாம் பொய்யா?

அக்டோபரில் திருமணம்:
அக்டோபரில் திருமணம்:

விஷால் – அனிஷா திருமணம் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே கூறியபடி தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் தான் விஷாலின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் அம்மா:
விஷால் அம்மா:

ஆனால் அதில் இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கக் கட்டடத்தில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பதில் விஷால் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவரது பெற்றோருக்கு அதில் உடன்பாடு இல்லை. குறிப்பாக விஷாலின் அம்மாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது.

காரணம்:
காரணம்:

நடிகர் சங்கக் கட்டடத்தில் திருமணத்தை நடத்தக் கூடாது என விஷால் அம்மா தடைபோடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, நடிகர் சங்கக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. கிரகப்பிரவேசம் நடைபெறாத ஒரு கட்டடத்தில் திருமணத்தை நடத்தக் கூடாது என்பது விஷால் அம்மாவின் வாதம்.

செட் போட திட்டம்:
செட் போட திட்டம்:

ஆனால் சினிமாவில் செய்வது போல் தற்காலிகமாக செட்டு போட்டு நடிகர் சங்கக் கட்டடத்திலேயே திருமணத்தை நடத்தலாம் என்று விஷால் அடம்பிடிக்கிறார். ஏனெனில் இதனை தனது கவுரவப் பிரச்சினையாக அவர் நினைக்கிறார். இதற்கு அவரது அப்பா சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் திருமணம்:
ஆந்திராவில் திருமணம்:

விரைவில் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த சூழ்நிலை மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, விஷாலின் திருமண வரவேற்புக்காக சென்னையில் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஹால் புக் செய்யப்பட்டுவிட்டது. மேலும், பெண் வீட்டாரின் முறைப்படி அக்டோபர் 9ம் தேதி ஆந்திராவில் தான் திருமணம் நடக்கும் என்ற பேச்சும் ஒருபுறம் இருக்கிறது. விஷால் திருமணத்துக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால், அதற்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.