பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டபடியே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் வரிசையாக பிளவுகள் ஏற்பட்டு வருகிறது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டபடியே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் வரிசையாக பிளவுகள் ஏற்பட்டு வருகிறது.

டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டபடியே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் வரிசையாக பிளவுகள் ஏற்பட்டு வருகிறது.

லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், மாநில கட்சிகளை யார் தங்கள் பக்கம் இழுக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருக்கிறது. முக்கியமாக தென்னிந்திய கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே ஆட்சியை பிடிக்க முடியும்.

இதில் காங்கிரஸ் கொஞ்சம் முந்திக் கொண்டது என்று கூட கூறலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை 21 எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது.

மூன்று ”என்” களுக்கு இடையில் நடக்கும் மோதல்.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. பின்னணி என்ன?

மோசம்
மோசம்

ஆனால் லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இந்த எதிர்க்கட்சிகள் நினைத்தது போல இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இணைவது சரியாக இருக்காது. உடனே பாஜக கூட்டணிக்கும் கொஞ்சம் நூல் விட்டு வைப்பதுதான் நல்லது என்று முக்கியமான கட்சிகள் முடிவெடுத்து உள்ளது.

நேற்று என்ன
நேற்று என்ன

நேற்றே இந்த லிஸ்டில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் இணைந்துவிட்டார். இத்தனை நாட்கள் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த நவீன் நேற்று திடீர் என்று ஒடிசாவிற்கு நல்லது செய்யும் கட்சியுடன் கூட்டணி. யார் ஒடிசாவிற்கு நல்ல ஆஃபர் அளிக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்று கூறினார்.

ரத்து செய்துவிட்டார்
ரத்து செய்துவிட்டார்

நீண்ட சிக்கலுக்கு பின் நேற்றுதான் சோனியாவும் மாயாவதியும் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் அதுவும் நேற்று ரத்து செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றுதான் அமித் ஷா திட்டமிட்டு வந்தார். அவர் நினைத்தது போலவே மிக முக்கியமான சந்திப்பு நேற்று ரத்து செய்யப்பட்டது.

மஜத
மஜத

அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி இன்று நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் ஆட்சி கவிழலாம். இந்த பிரச்சனை காரணமாக அவர் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை தவிர்த்துள்ளார்.

பாஜக பிளான்
பாஜக பிளான்

பாஜக கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தலுக்கு பின் 5 கட்சிகள் ஆதரவு அளித்தால் போதும். அவர்கள் எளிதாக ஆட்சியை பிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள். இதனால்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எப்படியாவது உடைக்கும் முயற்சியில் அமித் ஷா தீவிரமாக இறங்கி உள்ளார் என்று கூறுகிறார்கள்.

வாய்ப்பு என்ன
வாய்ப்பு என்ன

பிஜு பட்நாயக், குமாரசாமி, ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் இவர்கள் நான்கு பேரை தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைய வைத்தாலே பாஜக பெரும்பான்மையை நெருங்கிவிடும் என்று கூறுகிறார்கள். இதனால் இவர்கள் நால்வரிடம் மட்டும் பாஜக பேச திட்டமிட்டுள்ளது. இவர்களை காங்கிரஸ் பக்கம் செல்ல விடாமல் தடுப்பதே தற்போது அமித் ஷாவின் பிளானாக இருக்கும் என்கிறார்கள்.