டெல்லி: 7 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் மொத்தமுள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெற்று வந்தன. இன்றைய தினம் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விடுபட்ட தொகுதிகளுக்கும் சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கும் இன்று வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.
மொத்தம் 59 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் சில மாநிலங்களில் மாலை 4 மணிக்கே தேர்தல் முடிவடைகிறது. பீகாரில் உள்ள சில தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் உள்ள சில தொகுதிகளிலும் உ.பி.யில் உள்ள சில தொகுதிகளிலும் மாலை 4 மணிக்கே தேர்தல் முடிவடைகிறது.

இதில் மிக முக்கியத் தொகுதியாக பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கும் இன்றுதான் தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் சென்று அங்குள்ள குகையில் இன்று காலை வரை தியானத்தில் இருந்தார்.