சென்னை: தனது அதிரடி எடை குறைப்பு பற்றிய ரகசியத்தை புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.

அருந்ததி படம் மூலம் தனி நாயகியாக ஜெயித்துக் காட்டியவர் அனுஷ்கா. தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர். பாகுபலி படம் உலகளவில் புகழ் அடைந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூடியது அவருக்கே வினையாகிப் போனது.

அப்படம் முடிந்தபிறகும் மீண்டும் தனது பழைய உடல்வாகைப் பெற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதனால் புதிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

புகைப்படம்:
வைரல் புகைப்படம்:
இந்நிலையில், சமீபத்தில் அவர் கடற்கரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. காரணம் அதில் மிகவும் இளமையாக உடல் எடை குறைந்து மெலிந்த தேகத்துடன் அவர் காட்சி அளித்தது தான். எப்படி இவர் அதிரடியாக இவ்வளவு மெலிந்தார் என ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

ரகசியம்:
புதிய புத்தகம்:

தற்போது அந்த ரகசியத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளார் அனுஷ்கா. தனது எடை குறைப்பு முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில் ‘என்ற தலைப்பில் புத்தகமாக அவர் வெளியிட இருக்கிறார்.

சிகிச்சை:
வாழ்க்கை முறை மாற்றம்:

இது தொடர்பாக அவர் கூறுகையில்,”நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உறவு முறை, கரியர், தூக்கம், உணர்ச்சிகள் தொடர்பான எல்லாவகையான பிரச்னைகளுக்கும் வேறு எந்தச் சிகிச்சை முறையும் இன்றி வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது.

தீர்வு:
முன்னுரை:

நமக்கு இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்தப் புத்தகம் உங்களுக்கு வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ஷில்பா ஷெட்டி முன்னுரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.