இந்த நவீன காலத்தில் நேர்மை, மனிதாபிமானம் எல்லாம் தூங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். இந்த உலகத்தில் நேர்மையாக நடந்து கொள்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறார்கள். அதிலும் சாமியார், துறவி என்று வேஷம் போடுபவர்கள் ஏராளம்.

மக்களும் எவ்வளவு தான் ஏமாற்றங்களை பார்த்தாலும் படித்தாலும் மீண்டும் மீண்டும் அதை நோக்கியே செல்கின்றனர். காரணம் கடவுளின் அருள் மற்றொன்று மக்களின் மனநிலையை மயக்குவது இது தான் சாமியார்கள் கையாளுகின்ற தந்திரம்.

பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாக சொல்லி 7 மாதமாக பாலியல் சீண்டல் செய்த துறவி…
இறை நம்பிக்கை
இதில் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால் நன்றாக படித்த மக்கள் கூட இதை நம்புவது தான். நம் மனதை கைக்குள் போட்டுக் கொண்டு நம்மை மாபெரும் முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள் போலி சாமியார்கள். குறிப்பாக பெண்கள் தங்கள் கற்பையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படித்தான் இந்த பெண்ணும் ஒரு துறவியால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

ஹாங்காங்கின் புகழ்பெற்ற துறவி

யுவென் மிங்-குன் என்பவர் ஹாங்காங்கின் புகழ்பெற்ற துறவி ஆவார். இவருக்கு 57 வயது இருக்கும். பேய் ஓட்டுவதில் வல்லவரான இவரை சந்திக்க தினந்தோறும் நிறைய மக்கள் வந்து செல்கின்றனர். அப்படித்தான் ஒரு அம்மாவும் அவருடைய இளவயது மகளும் அவரைக் காண சென்றுள்ளனர்.

பேயை ஓட்டும் சக்தி

அந்த பெண்ணுக்கு இருக்கும் பிரச்சினையை போக்க தன்னிடம் நிறைய சக்தி இருப்பதாக கூறியுள்ளார். நான் தீய சக்திகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஓட்டி விடுவேன் என்று அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த துறவி.

பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாக சொல்லி 7 மாதமாக பாலியல் சீண்டல் செய்த துறவி…
பாலியல் சீண்டல்

இந்த தீய சக்தி பெரும் அபாயமானது. இதை விரட்ட வேண்டும் என்றால் ஒரு வித்தியாசமான முறையை கையாள வேண்டும். அதற்கு நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்றும் அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்கள் வழியாகத்தான் பேயை ஓட்ட முடியும் என்று கூறி அவர்களை பயமுறுத்தி நம்ப வைத்துள்ளார்.

ஆவியின் ஆக்கிரமிப்பு

உங்கள் பெண்ணை ஆவிகள் ஆக்கிரமித்து உள்ளனர். அவரை அது தொந்தரவு செய்து வருகிறது. அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருகிறது என்று கூறியுள்ளார் அவர். அப்படி கூறி நம்ப வைத்து இவரே அந்த பெண்ணிடம் தப்பாக நடந்து கொண்டு வந்துள்ளார்.7 மாதம் டார்ச்சர்

7 மாதமாக இப்படி அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டலைத் தந்து கொடுமைபடுத்தியுள்ளார். பிறகு போலிசாரால் அந்த பெண் மீட்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

துறவிக்கு தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி துறவியின் குற்றம் புலப்பட்டதால் அவருக்கு தக்க தண்டனையை வழங்கியுள்ளார். அதே நேரத்தில் மக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது போன்ற போலி சாமியார்களை போலிசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

எல்லாரும் கடவுளால் படைக்கப்பட்ட உயிரினம் தான். இதில் யாரும் நிறைய சக்தி பெற்றவர்கள் என்று இல்லை. நம் முட்டாள்தனத்தை மற்றவர்கள் ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். கடவுளை நம்புங்கள், கடவுளையே ஏமாத்தும் மனிதர்களை அல்ல.