சென்னை: பிரபல தெலுங்கு பின்னணி பாடகி பிரணவி, இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருப்பவர் பிரணவி. ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி மிகவும் பிரபலமானவர் இவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

பாட வாய்ப்பு:
படுக்கைக்கு அழைப்பு:
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். படுக்கைக்கு வந்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை நிர்ப்பந்தித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குநர்:
ஓப்பனாகக் கேட்டார்:

அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார். அதில், பிரபல இயக்குனர் ஒருவர் இவரை ஒரு பாடல் பாட வருமாறு ஸ்டூடியோவிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற பிறகு படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே பாட வாய்ப்பு தருவதாக அவர் ஓப்பனாகவே கூறியுள்ளார்.

அதிர்ச்சி:
பிரணவி அதிர்ச்சி:

இதனால் அதிர்ச்சியடைந்த பிரணவி, “நான் சின்ன பொண்ணு. இப்போது தான் இன்டர் படிப்பை முடித்திருக்கேன்” எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பிரணவியிடம் அவர் ஆபாசமாகவே பேசியுள்ளார். இதனால் பொறுமையிழந்த பிரணவி கோபத்தில், “செருப்பால் அடிப்பேன்” என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன் என அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மீ டூ:
மீண்டும் மீ டூ:

ஏற்கனவே தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் கூறி நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சில காலம் இந்த மீ டூ பிரச்சினை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரணவி, சமீரா ரெட்டி போன்றோர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.