டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி வார பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி எப்படி
அதோடு ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தின் போர் கப்பல்களை தனது டாக்சி போல பயன்படுத்தினார்.அவர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார், என்று கூறினார். இந்த தொடர் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே பதில் அளித்து இருந்தார். மோடி எப்படி பேசினாலும் அவர் மீது வெறுப்பை உமிழ மாட்டேன் என்று ராகுல் பேசி இருந்தார்.

ராகுல்
ராகுல் காந்தி

இந்த நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி மீண்டும் பேட்டி அளித்துள்ளார். அதில், மோடி முழுக்க முழுக்க வெறுப்பு உணர்வுடன் பேசுகிறார். அவர் என் அப்பாவை மோசமாக விமர்சனம் செய்தார். என் பாட்டியை மோசமாக விமர்சித்தார். என் கொள்ளு தாத்தாவையும் விமர்சனம் செய்தார்.

பதில்
ராகுல் காந்தி பதில்

ஆனால் நான் மோடியின் குடும்பம் குறித்து பேசியது இல்லை. அவர் மனைவி, அப்பா, அம்மா குறித்து பேசியது கிடையாது. நான் செத்தால் கூட அப்படி ஒரு மோசமான சம்பவம் நடக்காது. என் மரணத்தில் கூட, நான் மோடியின் குடும்பம் குறித்து பேச மாட்டேன்.

அன்பு
அன்பே வெல்லும்

இதற்கு காரணம் இருக்கிறது. நான் ஆர்எஸ்எஸ் கிடையாது. அதேபோல் நான் பாஜகவும் கிடையது. அவர்கள்தான் இப்படி பேசுவார்கள். நான் காங்கிரஸ்காரன். எனக்கு இப்படி பேச வராது. அவர் என் மீது வெறுப்பை உமிழந்தால் நான் அவர் மீது அன்பை பொழிவேன். நான் மோடியை அன்பின் மூலம் தோற்கடிப்பேன், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.