சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் பரபரப்பு தூள் கிளப்புது. வன்முறை, பகைன்னு தீயை கொளுத்திப் போட்ட மாதிரி பத்திகிட்டு எரியுது.

கோயில் திருவிழாவை நடத்த விடாம, தன்னோட ஆளுங்களையும் கொன்னு போட்ட தேவராஜுக்கு ஒரு நாள் கெடு..நான் அவனை கொல்லுவேன்னு சபதம் போடறார் நாகப்பன்.

தேவராஜ் மீனில் குண்டு வச்சு நாகப்பன் வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு,ரொம்ப கூலா இருக்கார். ரெண்டு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கு.

நடு கடலுக்கு
நாகப்பன் கொடுத்த கெடு நெருங்க நெருங்க தேவராஜை காப்பாத்தணும்னு,போலீஸ் அவரை நடு கடலுக்கு பாதுகாப்புக்கு அழைச்சுக்கிட்டு போறாங்க.

ஆள்
தேவராஜின் ஆள் நீங்க கவலைப்படாம போங்க ஐயா.. வரும்போது நாகப்பன் செத்துட்டான்னு சேதி கேட்ப்பீங்கன்னு சொல்றான். என்னை பாதுகாக்கணும்னு போலீஸ் கூப்பிடறாங்க.. நாம சட்டத்தை மதிக்கணும் இல்லேன்னு தேவராஜ் போலீஸ் கூட மீன் பிடி கப்பலுக்கு போறார்.

சிரிப்பு.. சாப்பாடு
இங்க நாகப்பன் பயங்கரமா சிரிச்சுட்டு, எனக்கு பசிக்குது..சாப்பாடு போடு..நம்ம பொண்ணுங்களை கூப்பிட்டு. வேலைக்காரங்களுக்கு சாப்பாடு போடு. வெளியில் போலீஸ்காரங்க சாப்டங்களான்னு கேட்டு அவங்களுக்கும் சாப்பாடு போடுன்னு பொண்டாட்டிக்கிட்ட சொல்றார்.

அப்பாவுக்கு
என்னாச்சு அப்பாவுக்குன்னு பொண்ணுங்க ரெண்டு பேரும் யோசிக்கறாங்க.தேவராஜை ஏதாவது செய்ய அப்பா சதி செய்துட்டு, சந்தோஷமா இருக்காரா.. இல்லை தேவராஜை எதுவும் செய்துட்டாரான்னு யோசிக்கறாங்க.

மீனில் குண்டு
ஆனா, இன்னும் நாகப்பன் வீட்டுக்கு வந்த மீனில் குண்டு இருப்பதை,வீட்டுல யாரும் கண்டு பிடிக்கலை. ரெண்டு குடும்பத்தில் இழப்பு யாருக்குன்னு இன்னும் தெரியலை.

சீரியல் மாதிரி இல்லாம ஒரு வன்முறை நிறைந்த படம் பார்க்கற மாதிரி ஒவ்வொரு எபிசோடும் இருக்கு.