சென்னை: சன் டிவியின் பிரமாண்ட சீரியலா இப்போதைக்கு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அருந்ததி இடம் பிடிச்சு இருக்கு.

முருகன் கோயில் அவ்ளோ அழகா செட் போட்டு இருக்காங்க. மலேசியா பத்தமடை முருகன் மாதிரி அவ்ளோ பெரிய முருகன்.

பக்கத்துல சின்னதா பூஜை செய்ய அழகிய முருகன். இப்படி முருகன் சிலையையும், கோயிலையும் ரொம்ப அழகா பிரமாண்டமா செட் போட்டு இருக்காங்க.

முருகன் பக்தை
ஊரின் பெரிய பணக்கார குடும்பம் ஈஸ்வரி குடும்பம்.ஈஸ்வரி முருகன் பக்தை. இவங்கதான் அவ்ளோ பெரிய முருகன் சிலையை கோயிலில் பிரதிஷ்டை பண்றாங்க.

ரெண்டு கண்ணு
ஒரு பொண்ணை முகமூடி அணிஞ்ச பசங்க துரத்திக்கிட்டு வர்றாங்க…அவளை கிணத்துல தள்ளி விட்டுடறாங்கன்னு முதலில் காமிச்சாங்க. உண்மையிலே அந்த பொண்ணோட கண்ணு மட்டும்தான் தெரிஞ்சுது.

கிணற்று பக்கம்
அந்த பொண்ணை தள்ளிவிட்ட கிணற்று பக்கம் யாருக்ம் போகக் கூடாதுன்னு தடை விதிச்சு கேட் போட்டு பூட்டும் போட்டு விடறாங்க. எச்சரிக்கை.. உள்ளே போக அனுமதி இல்லன்னும் போர்டு போட்டுடறாங்க.

முருகன் கோயில்
ஈஸ்வரி அம்மா முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை கொண்டாடிட்டு, மகன் ஷண்முகம் அமெரிக்காவில் இருந்து வர்றான்னு ஆசையா வீட்டுக்கு வர்றாங்க.

முருக பக்தை
சிறந்த முருக பக்தைன்னு கோயிலில் ஈஸ்வரி அம்மா கையால ஓம் போட்ட தங்க தங்க செயினை பரிசா வாங்கறா தெய்வானை. அவளுக்கு ஈஸ்வரி அம்மாவின் மகன் சண்முகத்தை தெரியும் போல

காதலியுடன்
அமெரிக்காவில் ஷண்முகம் தமிழ் பொண்ணு ஒருத்தியை காதலிச்சு கல்யாணம் செய்ய இங்க வர்றான்.விமான நிலையத்தில் கார் காத்திருக்க, அவன் பைக்கை எடுத்துக்கிட்டு வர்றான்.

வழியில்
வர்ற வழியில் கிணறு இருக்கும் அதே இடத்தில் பைக் நின்னுருது. கூட வந்து பொண்ணு என்னவோ அங்க இருக்கு பாருன்னு உசுப்பேத்த கிணற்று பக்கம் வந்துடறாங்க.

ஷண்முகத்தைத் தேடி
கூட வந்த பொண்ணு உசுப்பேத்த உசுப்பேத்த பூட்டையும் உடைச்சுடறான் ஷண்முகம். ஷண்முகத்தை பார்க்க தெய்வானை வண்டியில வந்துகிட்டு இருக்கா. அப்போதுதான் ஒருத்தர் சொல்றார் ஈஸ்வரி அம்மா பையன் ஒரு பொண்ணோட அந்த கிணத்து பக்கம் போயிருக்காங்கன்னு சொல்லிடறார்.

கிணத்துல விழுந்து
பூட்டை உடைச்சு உள்ளே போன சண்முகமும் கூட வந்த பொண்ணும், அங்கே இருந்த எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்க.. ஷண்முகத்தை கிணற்றிலிருந்து வந்த ஒரு கை கிணத்துக்குள்ள இழுத்துடுது.