அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்வென்றால், நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் செயற்கைக் கோள்கள் பூமிக்கு அனுப்பியுள்ள படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள்

நிலவில் சுருக்கங்கள் ஏற்படுவதை கண்டுள்ளனர்.

குறிப்பாக நாசாவின் செயற்கைக்கோள்கள் இதுவரை அனுப்பியுள்ள 3500-க்கும் மேற்ப்பட்ட படங்களில் நிலாவின் நிலப்பரப்பு மேற்பகுதியில் மடிப்பு மடிப்பாக சுருக்கங்கள் இருப்பதாகவும், இவை நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்களால் ஏற்பட்டவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

50 மீட்டர்
மேலும் நிலப்பரப்பின் உட்பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு குளிர்ச்சி அதிகமாகி வருகிறது, இதனால் நிலவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதோடு மேல்பகுதியில் மடிப்பு போன்ற அமைப்பும் ஏறப்படுகிறது,குறிப்பாக இதனை திராட்சை
பழம் உலர்ந்து சுருங்குவதோடு ஒப்பிடலாம்.

ஒரு பகுதி தாழ்ந்து..
பொதுவாக திராட்சை உலரும்போது அதன் தோல் மெலிதாக இருப்பதால் சுருக்கம் உண்டாகிறது, அதேபோல் நிலவின் மேல் பகுதி உறுதியாக இருப்பதால் அதில் விரிசல்கள் ஏற்படுகின்றன. ஒரு பகுதி தாழ்ந்து அதன் அருகிலேயே மற்றொரு பகுதி உயர்கிறது.

அமெரிக்கா
மேலும் நிலவு சீராக குளிர்வடைநது வருவதால் சுருக்கம் அடைந்து வருகிறது என்பதற்கு முதல் ஆதாரம் இந்த ஆய்வின் மூலம் தற்சமயம் கிடைத்துள்ளது என அமெரிக்காவை சேர்ந்த தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தின் மூத்த விஞ்ஞானி தாமஸ் என்பவர் கூறியுள்ளார்.

5ரிக்டர்
நிலவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் வலுவானவை என்றும், அவை 5ரிக்டர் வரை இருக்கக்கூடும் என்றும் நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலவின் மேற்பரப்பில் உருவாகும் இந்த மடிப்புகள் சிறிய படிக்கட்டுகள் போல இருக்கின்றன எனவும் அவை 10மீட்டர்கள் முதல் பல கிலோ மீட்டர்கள் வரை நீள்கின்றன எனவும் தெரிகிறது.

அப்பல்லோ 11
இதுவரை நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய அப்பல்லோ 11, அப்பல்லோ 12, அப்பல்லோ 14, அப்பல்லோ 15 மற்றும் அப்பல்லோ 16 ஆகிய செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது. ஆனால் அப்பல்லோ 11 மட்டும்
மூன்று வாரங்களில் செயலிழந்துவிட்டது, மற்றவை மூலம் கிடைத்துள்ள படங்களே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.