ஒவ்வொருவரும் தங்களது சாகசங்களை வீடியோ பதிவு எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து லைக்ஸ் அள்ளுவது மற்றும் பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வது என்பது தற்போது சகஜமாகிவிட்டது. இதற்காகத் தேடி பிடித்து எதையாவது வித்தியாசமாக செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இப்படி ஒரு வீடியோ ப்ளோக்கர் செய்த ஒரு வித்தியாசமான முயற்சி அவருக்கு ஒரு கசப்பான அனுபவத்தைத் தந்துள்ளது. ஒரு உயிருடன் இருக்கும் ஆக்டோபஸ்ஸை அப்படியே சாப்பிட முயற்சித்து, அந்த ஆக்டோபஸ் அவர் முகத்தில் ஒட்டிக் கொண்டு கன்னத்தைக் காயம் செய்ததாக அறியப்படும் இந்த செய்தியைப் பற்றி முற்றிலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

சமூக வலைத்தளம்
இவர் தொடர்ச்சியாக சமூக ஊடகத்தில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்:
“சீசைடு கேர்ள் லிட்டில் செவென்” என்று சமூக ஊடகங்களில் அறியப்படும் இந்தப் பெண், கடல் உணவுகளை தான் உண்ணும் வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றம் செய்து வருபவர். இவர் தனது அடுத்த கட்ட வீடியோவாக, உயிருடன் இருக்கும் ஆக்டோபஸ் ஒன்றை சாப்பிட நினைத்து அதனை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய ஆசைபட்டார்.

உயிருடன் உள்ள ஆக்டோபஸ்ஸை கையில் பிடித்து சாப்பிடத் தொடங்கினார் :
இந்த வீடியோவில், அந்தப் பெண் ஒரு பெரிய ஆக்டோபஸ்ஸை தனது முகத்திற்கு அருகில் பிடித்திருப்பது தெரிகிறது. அந்த ஆக்டோபஸ்ஸின் கொம்புகளில் ஒன்றை அவர் கடிக்கத் திட்டமிட்டிருப்பதை இந்த பதிவு காட்டுகிறது.

அழுகையாக மாறியது

ஒரே வினாடியில், சிரிப்பு அழுகையாக மாறியது. அவர் அந்த ஆக்டோபஸ்ஸை கடித்த அடுத்த நொடி, எல்லாமே தலைகீழானது. ஆக்டோபஸ் மூர்க்கமாக மாறி, உடனடியாக, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. ஆக்டோபஸ் கடித்த முதல் நொடி, அந்தப் பெண் அதன் செய்கையை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டாலும், அடுத்த சில நொடிகளில் வலியின் காரணமாக அவர் அழத் தொடங்கிவிட்டார்.

விட்ட ஆக்டோபஸ்

ஒரு வழியாக ஆக்டோபஸ் அவரை விடுவித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒரு வழியாக ஆக்டோபஸ்ஸை தனது முகத்தில் இருந்து நீக்கி விட்டார் அந்தப் பெண். ஆனால் ஆக்டோபஸ் தனது கொம்பால் அவரது கன்னத்தில் கீறி விட்டிருந்தது. இதனால் அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டது.

உயிரோடு இருக்கா?

இது ஒரு புறம் இருக்க அந்த ஆக்டோபஸ் உயிருடன் இருக்கிறதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு, “இந்த முறை அது உயிருடன் தான் இருக்கிறது. ஆனால் விரைவில் மற்றொரு உயிருடன் இருக்கும் ஆக்டோபஸ்ஸை சாப்பிடும் வீடியோவை தான் பதிவு செய்வேன்” என்று நம்பிக்கையுடன் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.