இந்தியா தற்போது மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளை முப்படைகளிலும் புகுத்தி வருகின்றது. இதனால் ராணுவம், விமானம், கப்பல் என முப்படைகளிலும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு மிகவும் மேம்படுத்தப்பட்டு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றது.

ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் பட்டியலிலிலும் இந்தியா 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. விமானங்கள், போர் கப்பல், துப்பாக்கி என அனைத்தும் நவீன மயமாக்கி வருகின்றது இந்தியா.

இதில் உள்-வெளிநாட்டின் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த துவங்கி விட்டது இந்தியா. தற்போது நவீன குண்டுகளை வாங்கவும் இந்திய முன்வந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகள் கதறும் நிலைக்கு சென்றுவிட்டனர். ஸ்பைஸ் -2000 ரக குண்டு:
எதிரிகளின் பதுங்கு தளங்களை முற்றிலுமாக அழிக்கும் வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை முடிவு எடுத்துள்ளது.

பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது இந்திய விமானப்படை ஸ்பைஸ் -2000 ரக குண்டுகளை வீசியது. இந்த குண்டுகள் கட்டிட கூரைகளை துளைத்து உள்ளே விழுந்து 80 கிலோ வெடிபொருள்களை வெடிக்க வைத்தன.

உள்ளே இருப்போர் மட்டும் பலியாவர்கள்:
இந்த ரக குண்டுகளால் கட்டிடம் சேதம் அடையாது,உள்ளிருப்போர் மட்டுமே பலியாவார்கள். இதே நேரத்தில் இஸ்ரேல் தயாரிப்பான நவீனப்படுத்தப்பட்ட ஸ்பைஸ் -2000 ரக குண்டுகளை வாங்க இந்திய விமானப்படை முடிவு எடுத்துள்ளது.

பதுங்கு தளங்களை அடியோடு அழிக்கும்:
மார்க் -84 ரக முனை கொண்ட ஸ்பைஸ்-2000 ரக குண்டுகள் 429 கிலோ எடையும், 129 இன்ஞ்ச் நீளமும், 18 இன்ஞ்ச் விட்டமும் கொண்டவை. இந்த குண்டுகள் கட்டிடங்கள் மற்றும் பதுங்கு தளங்களை அடியோடு அழிக்கும் என்பதால் அவற்றை இஸ்ரேலிடம் இருந்து வாங்க உள்ளதாக விமானப்படை கூறியுள்ளது.

ரூ.300 கோடி மதிப்பு:
முப்படைகளும், 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை அரசு அனுமதி இன்றி வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் புதிய குண்டுகளை வாங்க உள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

பதறும் பாகிஸ்தான்:
பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் அத்துமறீ தாக்குதல் நடத்துவதால், இதுபோன்ற பிரச்னையின் போது, இந்தியா இந்த வகையான குண்டுகளை பயன்படுத்தினால் , தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பாகிஸ்தான், தீவிரவாதிகள் கதறுகின்றனர்.