உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
பிபர நபர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களுடைய வருகையின் காரணமாக பெரிதும் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கோபம் எதுவும் கொள்ளாமல் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. அடுத்தவர்களுடன் பேசுகின்ற பொழுது பேச்சில் கொஞ்சம் நிதானம் தேவை. புதிய நண்பர்களின் இறிமுகத்தால் லாபங்கள் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் சுப செய்திகள் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

உங்களுடைய புதிய எண்ணங்கள் மற்றும் உங்களுக்குச் சாதகமான முயற்சிகளின் வாயிலாக பொருள் சேர்க்கைகள் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பங்காளிகளுக்கு இடையே சமாதானம் ஏற்படும். பெரிய மகான்கள், யோகிகளின் ஆசிர்வாதங்களைப் பெறுவீர்கள். ஞாபக மறதி குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய நண்பர்களைச் சந்தித்து அதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

உங்களுடைய பேச்சுத் திறமையின் காரணமாக பெரும் லாபத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு உங்களுக்கு அமையப் போகிறது. வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், சண்டைகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பொது சபைகளில் உங்களுக்கான ஆதரவுகள் பெருகும். பரம்பரை சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். வெளிறாட்டுப் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு நினைத்த பலன் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளின் செயல்பாட்டினால் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

கடகம்

வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பாக பலனைத் தரும பயணங்களின் மூலமாக சிறந்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்களுடைய ஆதரவினால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவினால் உங்களுக்கு ஆசிர்வாதமும் அருளும் உண்டாகும். மாணவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்

புதிதாக அமுகமானவர்களுக்கு மத்தியில் உங்களுடைய மரியாதையும் செல்வாக்கும் உயர ஆரம்பிக்கும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் பொறுமையாகவும் அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் வேலை செய்கின்ற இடத்தில் உங்களுக்கான பொறுப்புகள் கூடிக் கொண்டே போகும். தொழிலில் நீங்கள் எடுக்கின்ற சில முயற்சிகள் கொஞ்சம் கால தாமதத்தை ஏற்படுத்தும். கல்வித் துறையில் இருக்கின்ற மாணவர்களுக்கு சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.கன்னி

பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். பூஜை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மனம் லயித்துப் போவீர்கள். உங்களுடைய உயர் அதிகாரி உங்களுடன் நட்பு பாராட்டுவார். திருமணப் பேச்சு வார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும். வேலையில் உங்களுடைய பொறுப்புகளும் பணிச்சுமையும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

உங்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். திடீர் யுாகத்தின் மூலம் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பலன்கள் கிடைக்கும். மனை, வீடு விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல்கள் உருவாகும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதுக்குள் தோன்றும் புதுவிதமான எண்ணங்களினால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். பெரியோர்களுடைய அனைத்து ஆசிர்வாதங்களையும் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.விருச்சிகம்

நண்பர்களிடம் உரையாடுகின்ற பொழுது பேச்சு வார்த்தைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருந்த சின்ன சின்ன சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு பேரும் புகழும் தேடி வரும். மனதுக்குள் செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விடாமுயற்சி அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமும் இருக்கும்.தனுசு

நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்ற வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். போட்டிகளில் நீங்கள் நினைத்த படி வெற்றி உங்கள பக்கமே இருக்கும் உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு அதிக முயற்சி தேவைப்படும் நாள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்

உடன் பிறந்தவர்களின் மூலமாக உங்களுக்குச் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இசை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். டிஜிட்டல் சம்பந்தப்பட்ட துறையில் பணியில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்கும் எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில் இருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்

காது சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வந்து போகும். புதிய நட்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழில் அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். புதிதாக ஒரு வியத்தைக் கண்டறிந்து அதற்காகப் புகழப்படுவீர்கள். உடன் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் உங்களுடைய வேலை இலகுவாக முடியும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் உங்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஞானத் தேடலும் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் எதையும் நிதானமாகச் செய்வது நல்லது. புதிதாக எதையும் தொடங்காமல் இருப்பதும் நல்லது. திருமணப் பேச்சுவார்த்தைகள் கூடி வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.