தல அஜித்-நயன்தாரா நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்தான் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தை விட தமிழ்நாட்டில் அதிக அளவு வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது விஸ்வாசம் திரைப்படம்.

இந்நிலையில் அஜித் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடந்த மே-1 அன்று விஸ்வாசம் திரைப்படம் சன்டிவியில் ஒளிபரப்பட்டது. இந்நிலையில் இதுவரை சன் டிவியில் ஒளிபரப்பட்ட திரைப்படங்களில் TRP ரேட்டிங்கை விட விஸ்வாசம் திரைப்படத்தின் TRP ரேட்டிங் அதிகளவில் உயர்ந்துள்ளது.

இதனால் வசூலில் மட்டுமல்ல TRP ரேட்டிங்கிலும் தான்தான் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அஜித். அவரின் இந்த அபார வளர்ச்சிக்கு அஜித்தின் ரசிகர்களும் பெரும் பங்கு அளித்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. விஸ்வாசம் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.