ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கையுடன் ஒரு விஷயத்தை தொடர்ந்தோம் என்றால் அது நமக்கு நிச்சயம் நேர்மறையான முடிவுகளையே கொடுக்கும். முதலில் ஒரு விஷயத்தை நம்புங்கள்.

அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதன்படி அன்றைய தினத்தைத் திட்டமிட்டால் நன்மைகளே உண்டாகும்.

மேஷம்
எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளில் புதிது புதிதாக ஏதேனும் முயற்சித்துக் கொண்டே இருப்பீர்கள். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்தத இடங்களில் இருந்து கடன் உதவிக்ள வந்து சேரும். முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கான தடைகள் நீங்கும். எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

ரிஷபம்

நணடபர்களுடனான நட்பு வட்டாரம் அதிகரிக்கும். நெருக்கமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவினால், தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் முனைவோர்கள் வேலையாட்களிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. அதிகாரப் பொறுப்புகளில் இருப்பவர்களுடைய அறிமுகமும் நட்பும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்

பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தேடல்க்ள உருவாகும். உறவினர்களால் சுப வரயச் செலவுகள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கடகம்

கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். வர்த்தகம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். பணியில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவுாகும். உடன் பிறந்த சகோதரர்களுடன் கொஞ்சம் கூடுதல் அன்பு செலுத்த வேண்டும். தொழில் சம்பந்தமாக புதிய நட்பு வட்டாரங்கள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்

நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண வரவு கொஞ்சம் கால தாமதமாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வை காண்பதற்கு முயற்சி செய்வீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மனம் மகிழ்வுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்

உங்களுடைய மன ஓட்டங்களும் சிந்தனைகளும் மேலோங்கும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை கையாளுகின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமற்ற நட்பு நிலை ஏற்படும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

அடுத்தவர்களை விமர்சனம் செய்வதைத் தவிர்க்கவும். வெளியூர் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு ஓரளவுக்கு பலன்கள் கிடைக்கும். முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். மனதுக்குள் புதிய எண்ணங்கள் உருவாகும். சுப செய்திகள் வந்து சேரும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

தனுசு

விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கு லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் சேமிப்புகள் உயரும். உங்களுடைய உடன்பிறந்த சகோதரர்களால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உருவாகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்

உங்களுடைய பயணங்களால் உங்களுக்கு லாபம் ஏற்படும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். தொழிலிலும் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும். அடுத்தவர்களிடம் தவறுகளை சுட்டிக் காட்டும்போது கொஞ்சம் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்

கடல்வழிப் பயணங்களால் நீங்கள் எதிர்பார்த்த தன லாபங்கள் உண்டாகும். நீங்கள் செய்யும் அறச்செயல்களினால் வெற்றி கிடைக்கும். சுப செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டுப் பயணங்களால் அனுகூலம் அடைவீர்கள். பொதுப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். திருமண வரன்கள் கைகூடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்

நண்பர்கள் மூலமாகக் கிடைக்கின்ற உதவியினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். உங்களுடைய சிந்தனைகளை முழுமையாகச் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.