சென்னை: நயன்தாராவே இறங்கி வந்திருக்கும் நிலையில் இந்த நெட்டிசன்கள் அவரை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். வரும் நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம், அடுத்த ஆண்டு திருமணம் என்று கூறப்படுகிறது.

அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அன்பான இயக்குநரே தலைவியை சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்த ரசிகர்கள் இந்த தகவலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் சில குசும்புக்கார நெட்டிசன்கள் நயன்தாராவிடம் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகிறார்கள். அதாவது 100 படங்கள் நடித்து முடித்த பிறகே திருமணம் என்றீர்களே, தற்போது அது என்னாச்சு என்று கேட்கிறார்கள்.

அவரே தனது மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ள நிலையில் இவர்கள் வேறு உசுப்பேற்றி விடுகிறார்கள். அப்பொழுது இருந்த சூழ்நிலைக்கு அப்படி சொல்லியிருக்கலாம். அதை அவரே மறந்துவிட்டார். ஆனால் இந்த நெட்டிசன்ஸ் மறப்பதாக இல்லை.

திருமணம் ஆனாலும் நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.