சென்னை: காக்க காக்க 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் கவுதம் மேனன்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காக்க காக்க.

சூர்யா, ஜோதிகா கெரியரில் மிகவும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைக்கிறாராம் கவுதம் மேனன். சூர்யா படுபிசியாக இருப்பதால் அவருக்கு பதில் அன்புச் செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக விஷாலை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளாராம் கவுதம்.

அன்புச் செல்வன் என்றாலே சூர்யா என ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அப்படி இருக்கும்போது அந்த கதாபாத்திரத்தில் விஷாலை நடிக்க வைப்பது எந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

அது சரி, இயக்குநர் தானே ஹீரோவை முடிவு செய்ய வேண்டும். இருப்பினும் 16 ஆண்டுகள் காத்திருந்த கவுதம் இன்னும் சில மாதங்கள் காத்திருந்தால் சூர்யாவின் கால்ஷீட்டே கிடைக்கும்.

ஆண்டுகள் ஓடினாலும் சூர்யா இன்னும் அதே கெத்தில் தான் உள்ளார். அதனால் அவரையே நடிக்க வைக்கலாமே கவுதம் மேனன்.