சென்னை: அயோக்யா படம் குறித்து நடிகர் விஷால் டிவீட் செய்துள்ளார்.

தெலுங்கில் ஹிட் ஆன டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான் அயோக்யா. விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

இப்படம் மே 10ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் வேலைகள் நேற்று தான் முடிக்கப்பட்டுள்ளது. இதனை விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அயோக்யா
அயோக்யா பணிகள்
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “அயோக்யா படத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன.

கோபம்
கோபத்தை காட்டியுள்ளேன்

சமூகத்தில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு எதிரான எனது கோபத்தை திரையில் காட்டுவதற்கு வாய்ப்பளித்த மோகனுக்கு எனது நன்றி.

பயம்
பயப்பட வேண்டும்

இனிமே எவனாவது ஒரு பொண்ண நாசம் பண்ணணும்னு நெனச்சா… தூக்கு தண்டனதான்னு பயப்படனும்”, என அவர் கூறியுள்ளார்.

சிக்கல்
ரிலீஸ் சிக்கல்

அயோக்யா படத்தின் வேலைகள் முடிந்துவிட்டதாக விஷால் கூறினாலும், படத்திற்கு இன்னும் சென்சார் வாங்கவில்லை. இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாவதில் சிக்கல் நீடிக்கிறது.