அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானி ஒருவர், பூமியின் மீது மோதப்போகும் விண்கல் விண்கல் அச்சுறுத்தலை, நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும், அது நாம் நினைப்பதை விட பெரியது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆஸ்ட்ரோனடிக்ஸ் பிளானட்டரி டிஃபென்ஸ் கான்ஃப்ரென்ஸில் (Astronautics Planetary Defense Conference) பேசிய நாசா விஞ்ஞானியான ஜிம் பிரிடென்ஸ்டெயின், பூமி மீதான விண்கல் மோதலை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம்.

அதை ஒரு கட்டுக்கதையாகவோ அல்லது திகிலூட்டும் செய்தியாகவோ அல்லது ஒரு அறிவியல் கோட்பாடாகவோ மட்டும் எடுத்துக்கொள்வது மிகவும் அபத்தமானது என்று கூறியுள்ளார். திரைப்படங்களைப் பற்றியது அல்ல
மேலும் பேசிய அவரை “இது ஹாலிவுட்டியைப் பற்றியது மட்டும் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், இது திரைப்படங்களைப் பற்றியது அல்ல, இது இப்போது நாம் நமது வாழ்க்கையை நடத்துவதற்கு அடித்தளமாக இருக்கும், நமக்கு இருக்கும் ஒரே ஒரு கிரகத்தின் பாதுகாப்பை பற்றியது.” என்றார்.

40,000 மைல் கிமீ வேகத்தில்
மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பூமியை தாக்கிய 20 மீட்டர் (சுமார் 65 அடி) விட்டம் கொண்ட ஒரு விண்கல்லையும் நினைவு படுத்தினார். அந்த விண்கல் ஆனது மணிக்கு சுமார் 40,000 மைல் கிமீ வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, மத்திய ரஷ்யாவில் உள்ள செலியாபின்ஸ்க் என்கிற நகரத்தில் விழுந்தது என்பதும், விண்கற்கள் என்பது ஒரு பெரிய விண்கல்லில் இருந்து உடைந்த சிறிய துண்டுகள் ஆகும், அப்படியான ஒரு சிறு துண்டு தான் குறிப்பிட்ட பகுதியில் மோதியது என்று அந்த நேரத்தில் பிபிசி அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

65 அடி விட்டம்
65 அடி விட்டம் கொண்டிருந்த விண்கல்லே ஒரு சிறு துண்டு தான் என்றால், முழு விண்கல்லில் அளவு என்னவாக இருக்கும்? அது நேரடியாக பூமியின் மோதினால் என்னவாகும்? என்பது தான் இங்கு எழுப்பப்படும் ஒரே கேள்வி.

சுமார் 1,400 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்
விழுந்த 65 அடி விட்டம் கொண்ட விண்கல்லே பெரிய வெடிகுண்டு வெடித்த அளவிலான அதிர்ச்சி அலை ஏற்படுத்தியதாம். அந்த பகுதியில் முழுவதும் உள்ள வீடுகள் மட்டும் கட்டிடங்களில் இருந்த ஜன்னல்கள் சேதமடைந்தனவாம். சுமார் 1,400 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்கிற தகவலும், அதில் பெரும்பாலோனோர்கள் பறந்து வைத்த கண்ணாடி துண்டுகள் மூலமே தாக்கப்பட்டனர் என்கிற தகவலும் உண்டு.

நாசாவின் மாடலிங் கண்டறிந்துள்ளது
இந்த இடத்தில் தான் பிரிடென்ஸ்டெயின் நமக்கான எச்சரிக்கையை பதிவு செய்கிறார். ரஷ்யாவில் நடந்த இந்த குறிப்பிட்ட நிகழ்வு ஆனது மிகவும் தனித்துவமான நிகழ்வு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால் நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், அது தனித்துவமான நிகழ்வு அல்ல. அத்தகைய நிகழ்வுகள் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும். அதை நாசாவின் மாடலிங் கண்டறிந்துள்ளது என்றும் கூறினார்.

ரஷ்யா
ரஷ்யாவின் மீது விண்கல் மோதிய அதே நாளில், மற்றொரு பெரிய சிறுகோள் ஆனது பூமியை மிக அருகாமையில் (சுமார் 17,000 மைல்களுக்குள்) கடந்து சென்றது, அது நூலிழையில் பூமியை தவறவிட்டு விட்டது என்கிற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

உலகம் முழுவதையும் பாதுகாக்க முடியுமா?
சமீபத்தில் நடந்த கிரக பாதுகாப்பு மாநாட்டில், விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்கள், இதுபோன்று உட்புகும் விண்வெளி பொருட்களிடம் இருந்து உலகம் முழுவதையும் பாதுகாக்க முடியுமா என்பதை பற்றி விவாதித்தனர் என்பதும், இதுபோன்ற ஒரு அபாயகரமான சூழ்நிலை நடக்கும் பட்சத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆனது அந்த விண்வெளி பொருளின் வேகத்தையும் பாதைகளையும் அளவிடுவதோடு, அதைத் திசைதிருப்ப முடியுமா அல்லது அது தாக்கப்போகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றலாமா என்பதை முடிவு செய்யும் திறன்களை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.