தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை தல அஜித் நடித்து வெளியான படங்களில் மிகவும் அதிகமான வசூல் செய்த திரைப்படம் விஸ்வாசம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பாலிவுட் சினிமாவில் வெற்றி பெற்ற பிங்க் என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் பேஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

தல அஜித் தந்தை சுப்பரமணியன் இவர் ஆந்திராவில் வசித்து வருகிறார் இவருக்கு உடல்நல குறைவின் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது தல அஜித் மற்றும் அவரது குடும்பத்திற்கு மிகுந்த சோகத்தை எற்படுத்திவுள்ளதாம். இதனால் தல ரசிகர்களும் வரூத்ததில் உள்ளனர்

ஆனால், அஜித் மனதளவில் தற்போது மிகவும் வேதனையில் இருக்கின்றார், நம் தளத்தில் முன்பே கூறியிருந்தோம்.

அஜித்தின் தந்தை மிகவும் உடல்நிலை முடியாமல் உள்ளார் என்று, ஆம், தற்போது அஜித் தன் அப்பாவுடனே தான் தினமும் இருக்கின்றாராம்.

இந்த ஒரு காரணத்தினால் தான் எந்த ஒரு அப்டேட்டும் அவர் பிறந்தநாளுக்கு கூட வரவில்லையாம்.

இதை புரிந்துக்கொண்டு ரசிகர்கள் அமைதி காப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.