நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தில் அவருடைய மகளாக மானஸ்வி என்ற குழந்தை நடித்திருப்பாள்.

ரசிகர்கள் மத்தியில் அவரின் கேரக்டர் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதால், யார் இவர்? இப்படி நடிக்கிறார் என்று அவரைப் பற்றி விசாரித்த போது, அவர் நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பது தெரியவந்தது.

அதன் பின்னர் தான் கொட்டாச்சி சமூகவலைத்தளங்களில் டிரண்டாகினார்.

இதைத் தொடர்ந்து இப்போது புதிதாக வீடு கட்டியிருக்கும் அவர் இது தன்னுடைய 15 ஆண்டுகால கனவு என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில், சென்னையில் என் வாழ்க்கை ஒரு மேன்ஷனில் தான் ஆரம்பித்தது. அதன் பின் 800 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து தங்கினேன்.

அதன் பின் நடிப்பில் கொஞ்சம் வருமானம் கிடைத்தவுடன் 2000 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன்.

இருப்பினும் என்னுடைய திருமணத்திற்கு பின்பு வாழ்கையில் நிறைய விஷயங்கள், மாற்றங்கள் எல்லாம் நடந்தன.

திருமணமாகி 7,000 ரூபாய் வாடகைக்குக் குடியேறினோம். ஆனால் அப்போது 7000 ரூபாய் கொடுக்கிறமோ என்று வருத்தமாக இருக்கும், இதனால் கண்டிப்பாக அடுத்த முறை கண்டிப்பாக வீடு வாங்குகிறோம் என்று எண்ணம் இருக்கும்.

இதே போன்று பல முறை நினைததுண்டு, குறிப்பாக என் மகள் மானஸ்வி பிறந்த பிறகு, வாழ்க்கையில் நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது.

800-ரூபாய்க்கு மேன்ஷன் துவங்கிய வாழ்க்கை திருமணத்திற்கு பின் ஒரு கட்டத்தில் 15000 ரூபாய் வீடு வரை கொண்டு சேர்த்தது.

இருப்பினும் சொந்த வீடு வாங்க முடியவில்லை, மூணு வயசுல மானஸ்வி நடிக்க ஆரம்பிச்சிட்டா. அப்படியே வாழ்க்கைத் தரம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சி அடைந்தது. இப்போ அவளுக்கு ஆறு வயசு. நாங்க ஆசைப்பட்ட சொந்த வீட்டை இப்போ வாங்கிட்டோம்.

மே மாதம் 1-ஆம் தேதி தான் புது வீட்டுக்கு குடி வந்திருக்கோம். இது எல்லாமே என் மனைவி அஞ்சலியால் மட்டுமே நடந்தது.

ஆரம்பத்திலிருந்தே வாடகை வீடு அவங்களுக்குப் பிடிக்கலை. அவங்க டப்பிங் பேச ஆரம்பிச்சதும், கண்டிப்பா நாம வீடு வாங்குறோம்னு ரொம்ப முயற்சி எடுத்தாங்க. என் வீட்டிலுள்ள இரண்டு தேவதைகளால் தான் சாத்தியமானது என்று கூறி முடித்தார்.