மனிதர்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்று தூக்கமாகும். ஏனெனில் நாலு முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வு அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றல் இரண்டையும் வழங்குவது தூக்கம்தான். ஆனால் அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் இல்லயெனில் பிரச்சினைதான்.

இந்து புராணங்களின் படி தூங்கும் முறை, தூங்கும் நிலை மற்றும் திசை போன்றவை நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஒருபோதும் வடக்கு திசை பார்த்து தலைவைத்து தூங்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அதன்பின் பல அறிவியல் காரணங்களும் உள்ளது.

வடக்கு பக்கம் தலைவைத்து படுப்பது
வடக்கு-தெற்கு திசையில் தலைவைத்து படுப்பது என்பது வடக்கு பக்கம் தலையும், தெற்கு பக்கம் காலும் இருப்பதாகும். பொதுவாக இந்த திசையில் தலைவைத்து படுக்கும்போது மின்காந்த அலைகளால் உங்கள் உடல் பாதிப்பிற்குள்ளாகும். வட துருவத்தின் காந்த சக்திகள் வடக்கில் திசைதிருப்பப்படுவதை ஏற்படுத்துகின்றன, இதனால் மூளையின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

விளைவுகள்

இந்த திசையில் படுக்கும் போது உங்களின் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் இது உங்களின் தூக்கத்தை கெடுப்பதுடன் இரக ஓட்டத்தையும் அதிகரிக்கும் குறிப்பாக மூளைப்பகுதியில். தொடர்ந்து இவ்வாறு செய்வது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். சாஸ்திரங்களில் இது பற்றி என்ன கூறியுள்ளது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

எதிர்மறை விளைவுகள்

நமது சுற்றுசூழல் ஆனது பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறு அலைவரிசைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவற்றின் ஓட்டம் சில திசைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. நமது உடலானது அந்த ஓட்டத்தில் தலையிட்டால் நமது உடலும் அதன் ஆதிக்கத்திற்கு கீழ் வர நேரிடும். இந்த எதிர்மறை அலைவரிசை நமது வாழ்க்கையில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

திரியாக் அலைவரிசை

பிறவகை எதிர்மறை அலைவரிசைகள் திரியாக் என்று அழைக்கப்படுகிறது. திரியாக் என்பதன் பொருள் திரித்து கூறப்படுவதாகும். இந்த வகை அலைவரிசைகள் மனிதர்களுக்கு துன்பத்தை உண்டாக்கக்கூடும். இந்த அலைவரிசை செல்லும் திசைகள் எதிர்மறை ஆற்றல்களால் நிரப்பப்படுகிறது. இந்த அலைவரிசை தெற்கு திசைநோக்கி செல்கிறது, எனவே தெற்கு திசைநோக்கி கால்வைத்து படுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

திரியாக் அலைவரிசையின் முக்கியத்துவம்

திரியாக் அலைவரிசைகள் உடலுக்கு பல தீமைகளை ஏற்படுத்தக்கூடும். இந்த அலைவரிசை அதிகரிக்கும்போது அது பேய், பிசாசு மற்றும் தீயசக்திகளால் தாக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த திசையில் தொடர்ந்து படுக்கும்போது அது தீயசக்திகளால் ஏற்படும் ஆபத்துக்களை அதிகரிக்கிறது.

நரகத்தின் அதிர்வுகள்

தெற்கு திசையானது மரணம் மற்றும் எமலோகத்துடன் தொடர்புடையது. வடக்கு திசையில் தலைவைத்து தூங்கும்போது, கால்கள் தெற்கு திசையில் இருக்கும்போது நமது பாதங்கள் நரகத்திலிருந்து வெளிவரும் அதிர்வுகளும் இணைகிறது. இதனால் தூக்கத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும், பயத்தில் விழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

செய்ய வேண்டியது

நாம் தூக்கத்திற்கு அதிக நேரத்தை செலவழிக்கிறோம், எனவே இது போன்ற தூக்க நிலைகளை பின்பற்றாதீர்கள். அதனை மீறி வடக்கு-தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் பல பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவைத்து தூங்க சிறந்த திசை கிழக்குதான். இதற்கு ஏற்றாற்போல வீட்டை கட்டுவது நல்லது.