ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
தொழிலில் நீங்கள் கையாளுகின்ற புதிய யுக்திகளால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக சுப விரயச் செலவுகள் உண்டாகும். வெளிநாடுகுளில் தொழில் செய்பவர்களுக்கு நினைத்தபடி பலன்கள் கிடைக்கும். உங்களுடைய எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளும் சிந்தனைகளும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

ரிஷபம்

பொதுநலத்திற்கான பெரும் பணம் உதவிக்ள செய்ய முன்வருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வந்து போகலாம். பூஜை மற்றும் ஆன்மீக காரியங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகள் உங்களிடம் நட்பாகப் பழகுவார்கள். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். முக்கியப் பொறுப்புகளில் இருக்கின்றவர்கள் கூடுதல் பொறுப்புகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

மிதுனம்

இசை சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுக்கு உண்டாகும் திடீர் யோகத்தால் நீங்கள் எதிர்பார்க்காத பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இருக்கின்ற கவலைகள் நீங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதளம் சம்பந்தப்பட்ட வேலை செய்கின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்

வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய புதிய முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். செய்கின்ற செயல்களினால் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்

புதிய நபர்களின் அறிமுகத்தினால் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களின் மூலமாக நினைத்த காரியங்கள் நிறைவுறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி

உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் சில முக்கியப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கு இடையில், கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பயணங்களின் மூலமாகஈ நீங்க்ள எதிர்பார்த்த, உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு உரிய பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

ஆன்மீக ஈடுபாட்டில் மனம் ஞானத்தைத் தேடிச் செல்லுமு. தர்ம காரியங்களில் ஈடுபட்டு அதன்மூலம் நிறைய பேரின் அனுகூலங்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ள பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கரும்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

தங்களுடைய மனதுக்குள் தோன்றுகின்ற பல புதிய எண்ணங்களினாலும் உங்களுடைய சாதகமான முயற்சிகளாலும் பணம் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். போட்டிகளின் மூலமாக உங்களுக்கு லாபம் உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையேயான உறவுகள் மேம்பட்டு இருக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய நினைவாற்றல்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

தனுசு

வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாட்டினால் பெரும் லாபம் உண்டாகும். உங்களுடைய நீண்ட கால நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உடன் பிறந்தவர்குள் மூலம் ஆதாயங்கள் அடைவீர்கள். தொழில் சம்பந்தமான சில யுக்திகளைக் கற்றுக் கொண்டு அதை சிறப்பாகப் பின்பற்றிக் காட்டுவீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

மகரம்

வீடு மற்றும் மனை தொடர்பாக எடுக்கின்ற தொழில் முயற்சிகள் யாவும் நல்ல பலன்கனைத் தரும். வாகனங்களில் பயணங்களின் மூலம் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவடையும். பெற்றோர் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பெரியவர்களுடைய ஆசிர்வாதங்களைப் பெறுவீர்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்

செய்யும் தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன தடங்கல்களும் இழுபறி நிலையும் நீங்கும். தொழிலை முன்னேற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களின் மூலமாக இருந்து வந்த பல இன்னல்கள் குறையும். பணிகளில் உங்களுடைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப அங்கீகாரமும் பாராட்டுக்களும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்

பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலான பலன்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக அனுகூலமான செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு வந்து சேருவதால், பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவியினால் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமும் இருக்கும்.