மூட்டுவலி என்பது உண்மையிலேயே மிக மோசமான அனுபவமாகத் தான் எல்லோருக்குமே இருக்கும். 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே போதும் மூட்டுவலி வந்துவிடும். ஒருகாலத்தில் மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு வரும் பிரச்சினை.

ஆனால் இந்த காலத்தில் மிக இளம் வயதிலேயே மூட்டுவலி வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட மூட்டுவலிக்கு வீட்டிலேயே அதுவும் நம்முடைய முன்னோர்களின் வழியில், உணவின் வழியே எப்படி மூட்டுவலியை சரிசெய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

மூட்டுவலி
மூட்டுவலி வருவதற்கு தற்போதெல்லாம் வயது வித்தியாசமே தேவைப்படுவதில்லை. எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சினை வந்துவிட்டது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அதற்கான தீர்வை நாம் என்னவாறு சமாளிக்கலாம் என்பது எளிதில் விளங்கிவிடும்.

மூட்டுவலி இளம் வயதிலேயே வருவதற்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் காரணம் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு குறிப்பாக கால்சியம் பற்றாக்குறையால் தான் இந்த மூட்டுவலி உண்டாகிறது. இதற்குக் காரணமே நம்முடைய மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கமும் தான் காரணம்.

அதேபோல் அடுத்த காரணம் என்பது, இன்றைய இளைஞர்களின் வேலைச்சூழல். இன்றைய இளைஞர்களில் பலரும் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து வேலை செய்கின்றவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கேற்ற ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் தான் நம்மிடம் இல்லை. சரி என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

எலும்புத் தேய்மானம்

கால்சியம் குறைபாட்டால் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. அந்த எலும்புத் தேய்மானத்துக்குக் காரணம் கால்சியம் பற்றாக்குறை தான். அப்படி கால்சியம் பற்றாக்குறையால் எலும்பின் அடர்த்தியும் உறுதித் தன்மையும் குறைய ஆரம்பித்து விடுகிறது.

தொற்றுக்கள்

வெறுமனே கால்சியம் பற்றாக்குறை மட்டுமல்லாது, நிறைய வைட்டமின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையாலும் எலும்பு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினை உண்டாகிறது. அதோடு இரும்புச்சத்து குறைபாடு, மக்னீசியம் குறைபாடு அத்தனையும் சேர்ந்து பெரும் பிரச்சினையை உண்டாக்கிவிடுகிறது.

சரிசெய்யும் ஜூஸ்கள்

என்ன மருந்து சாப்பிட்டாலும் நாட்டு வைத்தியம் செய்தாலும் மூட்டுவலி குணமாக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? அப்போ நீங்களும் அடம் பிடிங்க. சவால் விடுங்க. வெறும் ஐந்தே நாளில் உன்னை ஓட ஓட விரட்டுறேன்னு சபதம் எடுங்க. கிண்டல் எல்லாம் இல்லங்க. இப்ப நான் சொல்ற இந்த 5 ஜூஸையும் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தீங்கன்னா ஒரே வாரத்துல உங்க மூட்டுவலி உங்கள விட்டுட்டு துணுடக் காணம் துணியக் காணம்னு ஓடிடும்.

பைனாப்பிள் ஜூஸ்

எலும்பு மூட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சரிசெய்வதில் பைனாப்பிள் ஒரு ஸ்டார். எலும்பு இணைப்புகளில் உள்ள அமன்மையான திசுக்கள், ஜவ்வுகளில் உண்டாகின்ற தொற்றுக்கள், வலி, தேய்மானம் மற்றும் மூட்டுப்பகுதிகளில் ஏற்படுகின்ற வீக்கங்கள் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருப்பது இந்த பைனாப்பிள் ஜூஸ் தான்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி எலும்புகள் மற்றும் மூட்டுப்பகுதிகளில் உள்ள தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கிறது. ஃபரீ ரேடிக்கல்ஸ் சேதத்தைத் தடுக்கிறது. இதில் உள்ள பிளவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் மூட்டுப்பகுதிகளில் உள்ள ரத்த செல்களுக்கு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வழி செய்கிறது.

பட்டை கலந்த தண்ணீர்

பட்டை மிகவும் வாசனை மிகுந்த ஒரு வாசனைப் பொருள் என்பது நமக்குத் தெரியும். இது நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது நம்முடைய மூட்டுப் பகுதிகளில் ஏற்படுகின்ற தேய்மானத்தைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 2008 இல் நடந்த ஆய்வு ஒன்றில், எலும்புத் தேய்மானம், வலி, எலும்பில் ஏற்படும் சேதங்கள் ஆகியவற்றுக்கு பட்டை தண்ணீர் மிகத் தீர்வாக இருப்பது தெரிய வந்துள்ளது.

தேன்

ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் பொதிந்திருக்கிற ஒரு இனிப்புப் பொருள் என்றால் அது நிச்சயம் தேன் மட்டும் தான். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளால் தொடர்ந்து நம்முடைய முன்னோர்களால் தேன் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சருமப் பிரச்சினைகள், இருமல், சளி போன்ற தொற்றுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மிக உடனடியாகத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இந்த தேனை ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து கலந்து தேய்த்து வந்தீர்கள் என்றால் அதைவிட மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸை அரைத்தும் மூட்டுவலி உள்ள இடங்களில் எலும்புத் தேய்மானங்கள் உள்ள இடங்கள், வீக்கம் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து, நன்கு உலர்ந்த பின் அதை வெந்நீர் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.