சேலம் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட என்ன காரணம், பின்னணி என்ன?
சேலம்: போலீஸ் கஸ்டடியில் ஜீப்பில் சென்றுகொண்டிருந்த ரவுடி கதிர்வேலுக்கு திடீரென கத்தி எங்கே இருந்து கிடைத்தது? ரவுடி போலீசை தாக்கியதும், போலீசார் ரவுடியை என்கவுண்டர் செய்ததும் என டக் டக்கென கொஞ்ச நேரத்திலேயே நடந்துமுடிந்து முடிய காரணம்.. எல்லாம் அந்த ஆலமரத்து பொந்திலேதான் விஷயம் அடங்கி உள்ளது!

நேற்று கதிர்வேலு என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள தாதனூரைச் சேர்ந்தவர்தான் கதிர்வேல். வயசு 28. பக்கா கிரிமினல்.. 3 கொலை கேஸ், 9 செயின் அறுத்த கேஸ் என ஏகப்பட்ட வழக்குகள் ஸ்டேஷனில் உள்ளது.

இவருக்கு காட்டூர் ஆனந்தன் என்பவர் நெருக்கம், இவர் ஒரு திமுக பிரமுகர் என்று சொல்லப்படுடிகிறது. இவருடன் சேர்ந்துதான் நிறைய கிரைம்களை செய்து வந்திருக்கிறார்.

முறுக்கு வியாபாரி
போனமாசம் 5ம் தேதி, வலசையூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் என்பவரை குத்தி கொலை செய்துள்ளனர் இவர்கள். ஆனால் கொலை செய்தது தாங்கள்தான் என்று தெரியாமல் இருக்க, இறந்த பிறகு விபத்தில் இறந்ததுபோல் நடுரோட்டில் பிணத்தை போட்டு சென்றுவிட்டனர்.

கதிர்வேலு
ஆனாலும் போலீசார் மோப்பம் பிடித்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்படித்தான் கதிர்வேலுவை மே 1-ம் தேதி அதாவது நேற்று முன்தினம் கைது செய்தனர். அப்போது விசாரணையில், முறுக்கு வியாபாரி கணேசனை எப்படி, ஏன் கொன்றோம் என்று வாக்குமூலம் தந்தார்.

ஆலமரத்து பொந்து
அதில்,”நாங்க பண்ற திருட்டு, வழிப்பறிகளில் கணேசனுக்கும் பங்கு உண்டு. கிடைத்த பணம், நகைகளை பங்கு போடும்போது எங்களுக்குள்ள சண்டை வந்தது. அதனாலதான் கணேசனை கத்தியால் கொலை பண்ணிட்டு, நடுரோட்டில் போட்டுட்டு போய்ட்டோம். அந்த கத்தி மற்றும் கொலை செய்ய பயன்படுத்தின ஆயுதங்களை எல்லாம் ஒரு ஆலமரத்து பொந்திலதான் வெச்சிருக்கோம்” என்றார்.

தாக்கினர்
உடனே போலீசாரும், குள்ளம்பட்டிக்கு சென்று அந்த ஆலமரத்து பொந்தில் இருந்த ஆயுதங்களை பார்த்தனர். சொன்னமாதிரியே எல்லாம் இருந்தன. அப்போதுதான் அதில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு கதிர்வேலு போலீசாரை தாக்க முயன்றுள்ளார்.

என்கவுண்டர்
இதில் போலீசாருக்கு மார்பு, கை என பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கையில் கத்தி, தப்பி ஓடிவிடவும் வாய்ப்பு நிறைய இருந்ததால்தான் போலீசார் கதிர்வேலுவை என்கவுண்டர் பண்ண வேண்டியதாக போனதாக சொல்கிறார்கள். காயமடைந்த 2 போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.